சின்னத்திரை சீரியல்களில் நடித்து ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தவர் தான் நடிகர் அசீம். இவர் இதனைத் தொடர்ந்து தற்பொழுது பிக்பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியில் பங்குபற்றி வருகின்றார். அத்தோடு இந்த நிகழ்ச்சியில் அடிக்கடி சண்டை மூட்டி விடுபவராகவும் இவரே இருந்து வருகின்றார்.
தனக்கு தைரியம் ஜாஸ்தி என்பதை போல அனைவரையும் மரியாதை இல்லாமல் தரக்குறைவாக பேசி வருகிறார்.இதேபோல் டஃப் கன்டெஸ்ட்டன்ட்டாக உள்ள தனலெட்சுமியை டார்கெட் செய்து வருகிறார்.இதனால் மற்றப் போட்டியாளர்கள் மத்தியில் தவறானவராகவே சித்தரித்து வருகின்றார்.
இதுதொடர்பாக வனிதா விஜயகுமார் ஊடகம் ஒன்றுக்கு பேட்டியளித்துள்ளார். அதில் அவர் பேசியிருப்பதாவது, அசீம் ரமணா படத்துல வர விஜயகாந்த் மாதிரி மாஸ் ஹீரோ போல நடக்கிறார். எல்லாத்துலேயும் தூக்கிட்டு ஓடுறாரு... முதல்ல ஆயிஷாவ தூக்கிட்டு ஓடினாரு அப்புறம் ஷெரினாவ தூக்கிட்டு ஓடினாரு.. இப்போ திரும்பவும் ஷெரினாவ தூக்கிட்டு ஓடியிருக்கார்.
இவரே பண்றாரா இல்ல அவர தூக்கிட்டு போக சொல்றாங்களான்னு தெரியல. இவரு ஆம்புலன்ஸ் டிரைவரா? இல்ல டாக்டரா? இல்ல பிக்பாஸ் கன்டெஸ்டன்ட்டா? இவரே பிரச்சனைய ஆரம்பிக்கிறாரு... எல்லாருக்கும் பிரச்சனை கொடுக்கிறாரு கடைசியில இவர்தான் காப்பாத்துறாரு.. சேவியர் அசீம் என அசீமை வச்சு செய்துள்ளார் நடிகை வனிதா விஜயகுமார்.இவரின் இந்த கருத்துக்கு ரசிகர்கள் ஆதரவு தெரிவித்து வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
Listen News!