• Jan 18 2025

பிக் பாஸ் சீசன் 8 என்னடா இப்படி போகுது..? நான் இப்போ இதுதான் பாக்கிறேன்! மாயா பளீச்

Aathira / 3 months ago

Advertisement

Listen News!

பிக் பாஸ் சீசன் 7ல் பங்கு பற்றி மக்கள் மத்தியில் மிகவும் பிரபலமானவர் தான் மாயா கிருஷ்ணன். இவர் பிக் பாஸ் வீட்டில் சர்ச்சைக்குரிய போட்டியாளராகவும் காணப்பட்டார். ஆனாலும் மாயா பூர்ணிமாவின் நட்பு பிக் பாஸ் வீட்டில் மட்டுமில்லாமல் ரசிகர்கள் மத்தியிலும் கொண்டாடப்பட்டது.

மேடை நாடகங்களில் நடிப்பதில் ஆர்வம் கொண்டவர்தான் மாயா கிருஷ்ணன். அதற்குப் பிறகு படங்களில் நடிப்பதற்கும் கமிட்டானார். இவர் நடித்த படங்களில் பெரிதாக இவருக்கு பெயரைப் பெற்றுக் கொடுத்த படம் என்றால் அது கமலஹாசன் நடித்த விக்ரம் திரைப்படம் தான்.

இந்த படத்தில் ஒரு சில சீன்களில் வந்தாலும் இவரது கேரக்டர் மிகவும் முக்கிய வாய்ந்ததாக காணப்பட்டது. இதை வைத்து பிக் பாஸ் வீட்டில் இருக்கும் கமலஹாசனுக்கும் மாயாவுக்கும் நெருங்கிய தொடர்பு இருப்பதாகவும் பேசப்பட்டது. அது மட்டும் இல்லாமல் பிக் பாஸ் வீட்டில் சர்ச்சைகளை எழுதும் போதும் உலக நாயகன் கமலஹாசன் மாயாவுக்கு சப்போர்ட் பண்ணுவதாகவும் குற்றம் சாட்டப்பட்டது.


இந்த நிலையில் தற்போது பிக் பாஸ் சீசன் 8 ஆரம்பிக்கப்பட்ட ஒரு வாரங்களை கடந்த நிலையில் இதை பார்த்த மாயா கிருஷ்ணன், தனக்கு இந்த முறை பிக் பாஸ் சீசன் 8 பார்ப்பதற்கு மிகவும் போராக இருப்பதாகவும் அதனால் மீண்டும் தான் பிக் பாஸ் செவனை பார்ப்பதாகவும் அதுதான் மிகவும் சுவாரசியமாக செல்வதாகவும் தனது கருத்தை தெரிவித்துள்ளார்.

தற்போது இவருடைய வீடியோ வைரலாகி வருவதுடன் உண்மையாகவே பிக் பாஸ் 8 மிகவும் சொதப்பலாக செல்வதாக ரசிகர்களும் தமது கருத்துக்களை தெரிவித்து வருகின்றார்கள்.

Advertisement

Advertisement