• Feb 23 2025

புதிதாக ஆரம்பித்த யூ- டியூப் சேனலில் தமது திருமண தேதியை அறிவித்த `இந்திரஜா - கார்த்திக்!' வைரல் வீடியோ

Aathira / 1 year ago

Advertisement

Listen News!

நடிகர் விஜய் நடிப்பில் வெளியான பிகில் படத்தில் கால்பந்தாட்ட வீராங்கனையாக நடித்து, பட்டையை கிளப்பியவர் தான் ரோபோ ஷங்கரின் மகள் இந்திரஜா.

இந்த படத்தின் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமான இவர், அடுத்து விருமன் திரைப்படத்தில் நடித்திருந்தார். 

தற்போது நடிகை இந்திரஜாவிற்கு அவருடைய முறைமாமாவுடன் விரைவில் திருமணம் நடைபெற இருப்பதாக தகவல்கள் வெளியான நிலையில், அவர்களது  நிச்சயதார்த்தம் பெரியோர்கள் முன்னிலையில் சென்னையில்  நடைபெற்று முடிந்தது.

இந்த நிலையில், அவர்களது திருணம் குறித்த கேள்விகள் எழும்பவே, தற்போது அதற்கு பதில் அளித்து உள்ளர்கள். 


அதன்படி, `Ungal Pandiyamma' என்கிற பெயரில் புதியதொரு யூடியூப் சேனலைத் தொடங்கிய இந்திரஜா, அதில் இந்திரஜா - கார்த்திக் இருவரும் அவர்களுடைய திருமண திகதியை அறிவித்திருக்கிறார்கள். 

எதிர்வரும் மார்ச் மாதம் 24 ஆம் திகதி இவர்களுடைய திருமணம் நடைபெற உள்ளதாக தெரிவித்து, திருமண பத்திரிகையும் காட்டி அவர்களுடைய சேனலில் வீடியோவாகப் பதிவிட்டிருக்கின்றனர்.

தற்போது இந்திரஜா - கார்த்திக் ஜோடிக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகின்றது.


Advertisement

Advertisement