• Feb 22 2025

நேற்று தொப்புளில் தோடு, இன்று கையில் வீணை.. ஜோவிகாவை முற்றிலும் மாற்றிய வனிதா..!

Sivalingam / 1 year ago

Advertisement

Listen News!


 நேற்று தொப்புளில் தோடு உடன் ஜோவிகாவை கிளாமராக மாற்றிய அவருடைய தாயார் வனிதா விஜயகுமார், இன்று சேலையுடன் குடும்பப்பாங்கான காஸ்டியூமில் கையில் வீணையுடன் எடுத்த  வித்தியாசமான போட்டோஷூட் புகைப்படத்தை பதிவு செய்துள்ளதை அடுத்து வனிதாவையும் ஜோவிகாவையும் புரிந்து கொள்ளவே முடியவில்லை என ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்

விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக் பாஸ் சீசன் 7 நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர் ஜோவிகா. இவர் சில நாட்களிலேயே சர்ச்சைக்குரிய போட்டியாளராக மாறினார் என்பதும்  குறிப்பாக அர்ச்சனாவிடம் இவர் நடந்து கொண்ட விதம் அவரது அம்மாவை விட இரு மடங்கு திமிறாக இருப்பதாக ரசிகர்கள் கருத்து தெரிவித்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பின்னர் இயக்குனர் பார்த்திபனிடம் உதவி இயக்குனராக ஜோவிகா சேர்ந்துள்ளதாக அறிவித்த நிலையில் அவ்வப்போது கிளாமர் புகைப்படங்களையும் வீடியோக்களையும் ஜோவிகா தனது இன்ஸ்டாகிராமில் பதிவு செய்து வந்தார்

குறிப்பாக அவர் நேற்று பதிவு செய்த கிளாமர் புகைப்படத்தை பார்த்து ரசிகர்கள் இன்ப அதிர்ச்சி அடைந்தனர். முற்றிலும் கிளாமராக தொப்புளில் தோடு, மிகவும் குட்டி மேலாடையுடன் தோன்றிய நிலையில் இன்று திடீரென கையில் வீணையுடன்  குடும்பப்பாங்கான  கெட்டப்பில் ஜோவிகா உள்ளார். மேலும் இந்த பதிவுக்கு ’சின்னஞ்சிறு வயதில் எனக்கு ஒரு சித்திரம் தோன்றுதடி’ என்ற கேப்ஷனையும் ஜோவிகா பதிவு செய்துள்ளார்.

இந்த இரண்டு பதிவுகளை பார்க்கும்போது ஜோவிகாவையும் அவரது அம்மா வனிதாவையும் புரிந்து கொள்ளவே முடியவில்லை என கமெண்ட்கள் பதிவாகி வருகிறது.




00:00

Advertisement

Advertisement