• Sep 20 2024

கூடிய விரைவில் ஓடிடியில் ரிலீஸாகும் இந்தியன் 2...!! மாஸ் காட்டும் ராயன்

Aathira / 1 month ago

Advertisement

Listen News!

ஷங்கர் இயக்கத்தில் உருவான இந்தியன் 2 படம் பற்றி மிகப்பெரிய எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் காணப்பட்டது. இந்தியன் தாத்தா என்ன சம்பவம் செய்யப் போகின்றார் என்ற எதிர்பார்ப்பு பெரிய அளவில் காணப்பட்டது.

ஆனால் ரசிகர்கள் மத்தியில் இந்த படம் வெளியாகி எதிர்பார்த்த ரெஸ்பான்ஸ் கிடைக்கவில்லை. இந்த  படத்திற்கு கிடைத்த விமர்சனங்களை தொடர்ந்து இந்த படத்தின் நீளம் 12 நிமிடமாக குறைத்தது தயாரிப்பு நிறுவனம்.

தற்போது வெளியான ராயன் படம் ஹிட்டாகி இருப்பதால் இந்தியன் 2 படம் ஓரம் கட்டப்பட்டுள்ளது. சென்னையில் சிங்கிள் தியேட்டர்களில் இந்தியன் 2 காட்சிகள் எதுவும் ஓடவில்லை. ஒரு சில தியேட்டர்களில் மட்டுமே போடப்பட்டு வருகின்றதாம்.


இந்த நிலையில், இந்தியன் 2 திரைப்படம் ஓடிடியில் எப்போது  ரீலிஸ் ஆகின்றது என்ற தகவல் தற்போது வெளியாகி உள்ளது.

அதன்படி நெட்பிலிக்ஸ் நிறுவனம் மிகப்பெரிய தொகைக்கு இந்தியன் 2 பட உரிமையை வாங்கி உள்ளது.. ஆனால் தியேட்டர்களில் வரவேற்பு கிடைக்காததால் ஓடிடி ரிலீஸ் முன்கூட்டியே வர வாய்ப்பிருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.

வழக்கமாக  ஒரு மாதம் கழித்து தான் ஓடிடியில் படங்கள் ரிலீஸ் ஆகும். ஆனால் அதற்கு முன்பே இந்தியன் 2 ரிலீஸ் ஆகலாம் என கூறப்படுகின்றது. எனினும் தேதி என்ன என்பது இன்னும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை.

Advertisement

Advertisement