• Oct 30 2024

கவர்ச்சி போட்டோக்களை போடுவதனால் நான் ஆபாச நடிகை இல்லை...4 வருடங்கள் ஒருத்தனோடு உறவில் இருந்தேன் அவ்வளவுதான் .......நான் செய்த பெரிய தப்பு ....

Kamsi / 8 months ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் கமல்ஹாசன், அஜித்குமார். விக்ரம் உள்ளிட்ட முன்னணி நடிகர்களுடன் நடித்து மக்கள் மத்தியில் பிரபலமானவர் நடிகை கிரண்.  இவருக்கு ஒரு காலத்தில் தொடர்ச்சியாக பட வாய்ப்புகள் கிடைத்து வந்தது . ஒரு பிரபல நடிகையாய் வலம் வந்த இவருக்கு  அப்படியே பட வாய்ப்புகள் குறைய தொடங்கியது.  அதன் பின் நடிகை கிரண் பட வாய்ப்புகள் இல்லாத காரணத்தினால்  கவர்ச்சியான புகைப்படங்களை சமூக வலைதள பக்கங்களில் வெளியிட தொடங்கினார்.


பிறகு அவருக்கு தெலுங்கு பிக் பாஸ் சீசன் 7 நிகழ்ச்சியில் கலந்துகொள்வதற்கான வாய்ப்பு கிடைத்தது. முதல் வாரத்திலேயே எலிமினேட் செய்யப்பட்டார். இதனையடுத்து, பட வாய்ப்புகள் இல்லாமல் இருக்கும் நடிகை கிரண் சமீபத்திய பேட்டி ஒன்றில் கலந்துகொண்டு மிகவும் வேதனையுடன் பேசியுள்ளார்."நான் ஒருவரை காதலித்தேன். நான் அவருடன் 4 வருடங்கள் உறவில் இருந்தேன். ஆனால் அவர் சரியில்லை என்று கொஞ்ச நாட்கள் பிறகுதான் தெரிந்துகொண்டேன். நான் அவரை திருமணம் செய்திருந்தால், அவர் என்னைக் கொலை கூட செய்திருப்பார். அந்த அளவிற்கு அவர் மிகவும் கெட்டவர். எனவே நான் அவரிடம் இருந்து விலகிவிட்டேன்.


அதன் பிறகும் ஒருவரை காதலித்தேன். அவனும் நல்லவன் இல்லை.அவனுக்கும் எனக்கும் செட் ஆகவில்லை எனவே, இருவரும் பிரிந்துவிட்டோம். தற்போது நான் தனியாக இருக்கிறேன். நான் எடுத்த தவறான முடிவால் என் வாழ்க்கையே அழிந்து விட்டது .பட வாய்ப்புகள் கிடைக்காமல் போனதற்கு இப்படியான சிலரை நம்பி ஏமாந்ததுதான் முக்கிய  காரணம். இப்போது நான் நடிக்க விரும்புகிறேன். ஆனால் யாரும் எனக்கு பட வாய்ப்புகள் தருவதில்லை. யாராவது வாய்ப்பு கொடுத்தால் கண்டிப்பாக மீண்டும் நடிப்பேன்.

மேலும் என்னுடைய சமூக வலைதளங்களில் நான் கிளாமரான போட்டோக்களை, வீடியோக்களை பதிவு செய்கிறேன். எனக்கு பிடித்த ஆடைகளை உடுத்தி நான் வீடியோக்களை பதிவிடுகிறேன் . கவர்ச்சி போட்டோக்களை போடுவதால் நான் ஒன்னும் ஆபாச பட நடிகை இல்லை. நான் ஆபாசமாக நடிக்க போவதும் இல்லை , இணையத்தில் வரும் கமெண்டுகள் என்னை ரொம்ப காயப்படுத்துகிறது என்று கண் கலங்கி பேட்டியில் நடிகை கிரண் கூறியுள்ளார். 


Advertisement