• Jan 19 2025

14 வருஷம் ஆயிடுச்சா? சமந்தா வெளியிட்ட க்யூட் வீடியோ

Sivalingam / 10 months ago

Advertisement

Listen News!

நடிகை சமந்தா திரையுலகில் நடிக்க வந்து 14 ஆண்டுகள் பூர்த்தியானதை அடுத்து அவர் வெளியிட்டுள்ள க்யூட் வீடியோ இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

நடிகை சமந்தா கடம்பா 2010 ஆம் ஆண்டு வெளியானவிண்ணைத்தாண்டி வருவாயாஎன்ற திரைப்படத்தில் ஒரு சின்ன கேரக்டரில் அறிமுகமானார். அந்த படத்தில் அவர் பெரிய அளவில் பிரபலமாகவில்லை என்றாலும் அதன் பின் வெளியான படங்கள் அவருக்கு வெற்றியை தந்தது என்பதும் இதையடுத்து அவர் தற்போது தமிழ் தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகையாக உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் தனது முதல் படம் வெளியாகி 14 ஆண்டுகள் ஆனதை அடுத்து அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ள க்யூட் வீடியோ இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. இந்த வீடியோவின் பின்னணியில் அவர் நடித்தவிண்ணைத்தாண்டி வருவாயாபடத்தின் பின்னணி இசை உள்ளது என்பதும் இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.
அதேபோல் அவர் வெளியிட்டுள்ள இன்னொரு வீடியோவில் குழந்தைகள் காப்பகத்தில் சமந்தாவுக்காக குழந்தைகள் பிரார்த்தனை செய்வது போன்று அவருடைய 14 ஆண்டு திரை உலக பயணத்திற்கு வாழ்த்து கூறுவது மான காட்சிகள் உள்ளன.

சமீபத்தில் உடல்நலக்குறைவால் திரையுலகில் இருந்து விலகிய சமந்தா தற்போது மீண்டும் புத்துணர்ச்சியுடன் ரீ என்ட்ரி ஆகியுள்ளார் என்பதும் இன்னும் குறைந்தது ஐந்து ஆண்டுகள் அவர் திரையுலகில் முன்னணி நடிகையாக இருப்பார் என்றும் கூறப்பட்டு வருகிறது.



Advertisement

Advertisement