புளூ சட்டை மாறன் தனது டுவிட்டர் பக்கத்தில் நடிகர் ரஜனிகாந்த் குறித்து காமெடியான பதிவொன்றை போஸ்ட் செய்துள்ளார். பாட்ஷா பட விழாவில் ரஜினி பேசியது அவரை அரசியலை நோக்கி இழுத்தது. ஆனால், எதையும் மிகவும் பொறுமையாக யோசித்து செய்யும் ரஜினி அதை செய்யவில்லை. கடந்த 25 வருடங்களாகவே தான் நடிக்கும் படங்களில் நேரிடையாகவும், மறைமுகமாகவும் அரசியல் தொடர்பான கருத்துக்களை தொடர்ந்து பேசி வந்தார்.
அதோடு ‘நான் எப்ப வருவேன்.. எப்படி வருவேன்னு யாருக்கும் தெரியாது. ஆனா, வர வேண்டிய நேரத்துல கண்டிப்பா வருவேன்’ என சொல்லி அவரின் ரசிகர்களை உசுப்பேத்தினார். மேலும், அவர் நடிக்கும் படங்களில் அரசியல்வாதிகளை வில்லன் போல சித்தரித்து ரஜினி அவர்களுக்கு அறிவுரை சொல்வது போல காட்சிகள் இருக்கு.
ஒருவழியாக நான் அரசியலுக்கு வருவது உறுதி என ஒரு நாள் அறிவித்தார். அவரின் ரசிகர்கள் உற்சாகமடைந்தனர். அதன்பின் கொரொனா ஊரடங்கு பரவி ரஜினி அண்ணாத்த படத்தில் நடித்து கொண்டிருந்தபோது அவரின் உடல்நிலை பாதிக்கப்பட்டது. எனவே, மருத்துவர்களின் அறிவுரையை ஏற்று நான் ஓய்வு எடுக்க விரும்புவதால் அரசியலில் ஈடுபட முடியாது என சொல்லி அவரின் ரசிகர்களுக்கு அதிர்ச்சி கொடுத்தார்.
ஆனால், அதன்பின் ரஜினி ஓய்வெடுக்கவில்லை. அண்ணாத்த படம் முடிந்தபின் ஜெயிலர், லால் சலாம், வேட்டையன், கூலி என தொடர்ந்து படங்களில் நடிக்க துவங்கிவிட்டார். அதுவும் முன்பை விட மிகவும் வேகமாக செயல்பட்டு வருகிறார். இந்நிலையில், பிரபல யுடியூப் விமர்சகர் புளூசட்ட மாறன் டிவிட்டரில் ‘தமிழ்நாட்டின் தலையெழுத்தை மாற்ற அரசியலுக்கு வரப்போவதாக சொன்னார். கடையில் ஓய்வு தேவைப்படுதுன்னு டாக்டர் சொல்லிட்டாங்க. அதனால கட்சி கேன்சல்னு அறிவிச்சாரு. இப்ப என்னடான்னா ஓய்வே இல்லாம ஆக்சன் படங்களா நடிச்சி தள்ளிட்டு இருக்காரே’ என பதிவிட்டு நக்கலடித்திருக்கிறார்.
Listen News!