• Apr 30 2024

விரைவில் உருவாக இருக்கும் 'மன்மதன் 2'... ஹீரோயின் ஜோதிகா இல்லையாம்... அப்போ யாரு..!

Prema / 1 year ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான சிம்பு நடிப்பில் 2004-ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் 'மன்மதன்'. இப்படமானது அந்த ஆண்டில் வெளியான சூப்பர் ஹிட் படங்களில் ஒன்றாகத் தேர்வு செய்யப்பட்டது. 


சைக்கோ த்ரில்லர் விடயங்களை மையமாகக் கொண்டு வெளியான இப்படத்தின் கதை, திரைக்கதையை சிம்பு எழுதியிருந்தார். இப்படத்தில் சிம்புவுக்கு ஜோடியாக ஜோதிகா நடித்திருந்தார். அத்தோடு முருகன் இயக்கியிருந்தார். மேலும் இப்படத்திற்கு யுவன் பிரமாண்டமாக இசையமைத்திருந்தார்.

இந்நிலையில் தற்போது மன்மதன் படத்தின் இரண்டாம் பாகத்தை சிம்பு இயக்கவுள்ளதாகக் கூறப்படுகிறது. அந்தவாக்கியில் இந்தப் படத்தின் கதை, திரைக்கதையை சிம்பு வேகமாகவும், மும்முரமாகவும் எழுதி வருகிறாராம்.

சிம்பு இயக்கி அவரே ஹீரோவாக நடிக்கும் இந்தப் படமானது அவரின் 50 அல்லது 51ஆவது படமாக இருக்கும் எனவும் சினிமா வட்டாரங்களில் இருந்து செய்திகள் வெளியாகி இருக்கின்றன.


அதுமட்டுமல்லாது மன்மதன் 2 ஷூட்டிங் அடுத்தாண்டு முதல் தொடங்கும் என்றும், படம் 2024-இல் வெளியாகும் எனவும் எதிர்பார்க்கப்பட்டு வருகின்றது. சிம்பு இப்படத்தின் வாயிலாக மீண்டும் இயக்குநர் அவதாரம் எடுக்கவுள்ளதாக வெளியான தகவலானது கோலிவுட் வட்டாரத்தில் உள்ள ரசிகர்களிடையே அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. 

இந்நிலையில், மன்மதன் படத்தில் சிம்புவுக்கு ஹீரோயினாக நடித்திருந்த ஜோதிகா, இரண்டாம் பாகத்திலும் சிம்புவுடன் இணைவாரா என ரசிகர்கள் பலரும் கேட்டு வருகின்றனர்.

மன்மதன் படத்தில் சிம்பு - ஜோதிகா ஜோடியின் கெமிஸ்ட்ரி பலருக்கும் பிடித்திருந்தது. இருப்பினும் சூர்யாவை திருமணம் செய்துகொண்ட பிறகு ஜோதிகா குறிப்பிட்ட ஒரு சில படங்களில் மட்டுமே நடித்து வருகிறார்.


இதனால் மன்மதன் 2 படத்தில் ஜோதிகா நடிக்கவில்லை என்றால் வேறு எந்த நடிகையை சிம்பு செலக்ட் செய்வார் என ரசிகர்கள் இப்போதிருந்தே எதிர்பார்த்துள்ளனர்.அந்தவகையில் இப்போதைக்கு சிம்புவின் லிஸ்ட்டில், சித்தி இத்னானி, அதிதி ஷங்கர், ஸ்ருதி ஹாசன் ஆகிய நடிகைகள் இடம்பெற்றுள்ளதாக தெரிகிறது. 

இதுகுறித்து அதிகாரப்பூர்வு அறிவிப்பும் அடுத்தாண்டு தொடக்கத்தில் சிம்பு மூலமாக வெளியாகும் எனக் கூறப்பட்டு வருகின்றது.

Advertisement

Advertisement

Advertisement