இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கடந்த ஜூன் 3 முதல் உலகம் முழுவதும் 5 மொழிகளில் ரிலீஸாகி சூப்பர் ஹிட் வெற்றி பெற்ற திரைப்படம் தான் விக்ரம். இப்படம் உலகம் முழுவதும் வசூல் வேட்டை செய்ததோடு கமல்ஹாசன் உட்பட இப்படத்தில் நடித்த ஒவ்வொரு பிரபலங்களின் மார்க்கெட்டையும் உயர்த்தி உள்ளது.
இப்படத்தின் ஆக்சன் காட்சிகளுக்கு ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பு கிடைத்தது. உலகம் முழுவதும் விக்ரம் படம் மிகப்பெரிய வசூலை அள்ளிக்குவித்தது.
இப் படத்தின் வெற்றியால் தயாரிப்பாளர் & நடிகர் கமல்ஹாசன், இயக்குநர் லோகேஷ் கனகராஜுக்கு 'லெக்ஸஸ்' ரக காரை பரிசாக அளித்தார்.விக்ரம் திரைப்படம் 50 நாட்களை கடந்து வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது.இந்நிலையில் சென்னையில் தமிழ்த் திரைப்பட பத்திரிகையாளர்கள் சங்க உறுப்பினர்களுக்கு அடையாள அட்டை வழங்கும் விழா நடைபெற்றது.
இதில் இயக்குநர்கள் பாரதிராஜா, லோகேஷ் கனகராஜ் கலந்துகொண்டனர். அப்போது பத்திரிகையாளர்களை சந்தித்த லோகேஷ் கனகராஜ் பல கேள்விகளுக்கு பதில் அளித்துள்ளார்.அதில் "நடிகர் அஜித்திற்கு ஸ்கிரிப்ட் இருக்கா? அவரோடு திரைப்படம் இயக்குவீர்களா?" என கேட்கப்பட்டது. அதற்கு பதில் அளித்த லோகேஷ் கனகராஜ், "கண்டிப்பா அஜித் சார் கூட வேலை செய்யனும்னு ஆசை இருக்கு. காலம் & கதை எல்லாம் தான் இதை முடிவு பண்ணும். அவரோட லைன் அப், நம்மளோட லைன்- அப்.. அப்பறம் அவர் நம்மள கூப்பிடுறதுனு எல்லாம் இருக்கு. எனக்கு எல்லார் கூடவும் வேலை செய்யனும்" என கூறியுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
பிற செய்திகள்
- மறைந்த நடிகை சித்ரா வழக்கில் ஏற்பட்ட திடீர் திருப்பம் ஹேம்நாத்தின் கோரிக்கையை ரத்து செய்த நீதிமன்றம்
- சீரியலில் மட்டும் தான் இந்த அடக்க ஒடுக்கமா?- முத்தழகு சீரியல் கதாநாயகியை மாடர்ன் உடையில் பார்த்திருக்கின்றீர்களா?
- முக்கிய பிரபலத்தை திடீரென சந்தித்த குக்வித் கோமாளி செஃப் வெங்கஷேட் பட்
- இயக்குநரால் இழுபட்டுக் கொண்டே போகும் கோப்ரா திரைப்படம்- ரெட் ஜெயன்ட் மூவிஸ் எடுத்த அதிரடி முடிவு
சமூக ஊடகங்களில்:
- Facebook : சினிசமூகம் முகநூல்
- Twitter: சினிசமூகம் ட்விட்டர்
- Instagram : சினிசமூகம் இன்ஸ்டாகிராம்
- YouTube : சினிசமூகம் யு டியூப்
Listen News!