• Jan 19 2025

இந்திய சினிமா வரலாற்றில் சாதனை படைத்த சூரி.. குவியும் பாசிட்டிவ் விமர்சனங்கள்

Aathira / 7 months ago

Advertisement

Listen News!

சின்னத்திரையில் திருமதி செல்வம் என்ற சீரியலில் நடித்து தனது சினிமா வாழ்க்கையை ஆரம்பித்தவர் தான் நடிகர் சூரி. அதற்குப் பிறகு வெள்ளித்திரையில் சின்ன சின்ன கேரக்டரில் நடித்து வந்தார்.

இதை தொடர்ந்து காமெடி நடிகராக அவதாரம் எடுத்த நடிகர் சூரி, தொடர்ந்து முன்னணி நடிகர்களுடன் காமெடியில் கலக்கி வந்தார். இவர் நடித்த படங்கள் மக்களால் பெரிதும் கவரப்பட்டது.

இதை அடுத்து வெற்றிமாறன் இயக்கத்தில் நடிகர் சூரி நடித்த விடுதலை திரைப்படம் யாரும் எதிர்பாராத வெற்றியை பெற்றுக் கொடுத்தது. அதில் சூரியின் நடிப்பு பெரிதும் வியக்கப்பட்டது.


அதில் கதாநாயகனாக இவரது அவதாரம் மக்கள் மத்தியில் பெரிதும் பேசப்பட்டது. அதன்பின் நாயகனாக தனக்கேற்ற கேரக்டர்களில் சிறப்பான படங்களை தேர்ந்தெடுத்து நடித்து  வருகின்றார்.

அந்த வகையில் துரை செந்தில்குமார் இயக்கத்தில் வெளியான கருடன் திரைப்படத்தில் சூரி கதாநாயகனாக களம் இறங்கியதோடு அவருடன் சசிகுமார், உன்னிமுகுந்தன்  ஆகியோரும் இணைந்து நடித்திருந்தார்கள். இந்த படம் தற்போது வசூல் ரீதியாக சாதனை படைத்து வருகின்றது.

இந்த நிலையில், கருடன் திரைப்படம் கிட்டத்தட்ட 12 நாட்களில் 44 கோடி வசூலித்து சாதனை படைத்துள்ளது. ஒரு காமெடி நடிகனாக இருந்து தற்போது ஹீரோவாக நடித்து வரும் சூரி இந்திய சினிமா வரலாற்றிலே முதன்முறையாக இவ்வாறு சாதனை படைத்துள்ளார். 

தற்பொழுது சூரிக்கு பலரும் வாழ்த்துக்களை தெரிவித்து வருவதோடு கருடன் படத்திற்கும் பாசிட்டிவ் விமர்சனங்களை ரசிகர்கள் கொடுத்து வருகின்றார்கள்.

Advertisement

Advertisement