• Jan 19 2025

சாமியார் ஆக போகிறாரா சமந்தா? வைரல் புகைப்படங்களால் ரசிகர்கள் அதிர்ச்சி..!

Sivalingam / 7 months ago

Advertisement

Listen News!

நடிகை சமந்தா கோவை ஈஷா யோகா மையத்திற்கு சென்று தியானம் செய்யும் புகைப்படங்களை பதிவு செய்துள்ள நிலையில் அவர் சாமியார் ஆக போகிறாரா என்ற கேள்வி ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது. 

தமிழ், தெலுங்கு திரை உலகின் முன்னணி நடிகைகளில் ஒருவரான சமந்தா திடீரென உடல் நலக்குறைவு காரணமாக சில மாதங்கள் திரையுலகில் இருந்து விலகினார் என்பதும், அதன் பின் முழுவதும் குணமாகி தற்போது மீண்டும் திரைப்படங்களில் நடித்துக் கொண்டிருக்கிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது. 

இந்த நிலையில் நடிகர் நாக சைதன்யா என்பவரை திருமணம் செய்து கொண்ட சமந்தா அவரிடம் இருந்து பிரிந்து விவாகரத்து பெற்று தனிமையில் வாழ்ந்து வரும் நிலையில் அவ்வப்போது அவர் ஆன்மீக கருத்துக்களை தெரிவித்து வருகிறார். 

இந்த நிலையில் திடீரென அவர் தற்போது கோவை ஈஷா யோகா மையத்திற்கு சென்று தியானம் செய்வது போன்ற புகைப்படங்களை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அதில் அவர் கேப்ஷனாக பதிவு செய்திருப்பதாவது:

நம்மில் பலர் குரு அல்லது ஆலோசகரை தேடுகிறோம், நம் வாழ்க்கையை ஒளிர செய்பவரை கண்டுகொண்டால் அது ஒரு பெரிய அதிர்ஷ்டம், ஞானம் வேண்டும் என்றால் அதனை உலகில் நீங்கள் தேடித்தான் ஆக வேண்டும், ஏனென்றால் ஒவ்வொரு நாளும் உங்கள் மீது பல்வேறு விஷயங்கள் திணிக்கப்படும். ஞானத்தை பெறுவது சாதாரண விஷயம் அல்ல, அதற்காக நீங்கள் ஒவ்வொரு நாளும், ஒவ்வொரு நிமிடமும் உழைக்க வேண்டும் .நீங்கள் பல விஷயங்களை தெரிந்து வைத்துக் கொள்வது மட்டும் போதாது, அதனை செயல்படுத்துவது மிகவும் முக்கியமானது’ என்று தெரிவித்துள்ளார்.

ஒவ்வொரு ஆண்டும் கோவை ஈஷா யோகா மையத்திற்கு சமந்தா சென்றாலும் இந்த முறை அவரது பதிவு மற்றும் அவரது புகைப்படங்கள் வித்தியாசமாக இருப்பதை அடுத்து அவர் சாமியார் ஆக போகிறாரோ என்ற சந்தேகத்தை எழுப்பி உள்ளது.



Advertisement

Advertisement