• Jan 19 2025

நடிகை நமீதா கர்ப்பமாகி, கலைந்துவிட்டதா? அவரே கூறிய அதிர்ச்சி தகவல்..!

Sivalingam / 7 months ago

Advertisement

Listen News!

நடிகை நமீதாவுக்கு தற்போது இரட்டை குழந்தைகள் இருக்கும் நிலையில் அவர் திருமணம் ஆன புதிதில் தனக்கு நான்கு மாத கர்ப்பம் ஏற்பட்டு அந்த கர்ப்பம் கலைந்துவிட்டதாக சமீபத்தில் அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளார்.

அஜித்,  விஜய் உள்பட பல பிரபலங்களுடன் இணைந்து நடித்த நடிகை நமீதா கடந்த 2017 ஆம் ஆண்டு வீரேந்திர சவுத்ரி என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இந்த நிலையில் திருமணத்திற்கு பின் 5 ஆண்டுகள் கழித்து கடந்த 2022 ஆம் ஆண்டு தான் அவருக்கு இரட்டை குழந்தைகள் பிறந்தன என்பதும் இந்த குழந்தைகளுக்கு ஆதித்யா மற்றும் கியான் ராஜ் என்று பெயர் வைத்தனர் என்பதும் தெரிந்தது.

இந்த நிலையில் நடிகை நமீதா, சமீபத்தில் பேட்டி அளித்தபோது ’திருமணமாகி சில மாதங்களில் தான் கர்ப்பமானதாகவும் தன்னுடைய அப்பாவிடமும் சந்தோஷமாக நீங்கள் தாத்தா ஆகிட்டீங்க என்று சொன்னதாகவும், கணவரும் சந்தோஷப்பட்டார்’ என்றும் தெரிவித்தார். ஆனால் திடீரென நான்காவது மாதத்தில் கர்ப்பம் கலைந்து விட்டது என்றும் இதனால் தான் மன உளைச்சலில் இருந்ததாகவும் இரண்டு மாதங்கள் எனக்கு என்ன நடந்தது என்றே தெரியாமல் வருத்தத்தில் இருந்ததாகவும் தெரிவித்துள்ளார்.



அதன் பிறகு ஐந்து ஆண்டுகள் கழித்து தான் மீண்டும் கர்ப்பமானேன் என்றும் மூன்றாவது மாதத்திலேயே இரட்டை குழந்தைகள் என்பது தெரிந்து விட்டதால் மிகவும் கவனமுடன் இருந்தேன் என்றும், கிட்டத்தட்ட ஆறு மாதங்களுக்கு மேல் படுக்கையில் தான் இருந்தேன் என்றும், நடக்கக்கூடாது, மாடி படி ஏறக்கூடாது என்று எனது கணவர் கண்டிஷன் போட்டு என் அருகிலேயே இருந்து கவனித்துக் கொண்டார் என்றும் அந்த பேட்டியில் நமீதா தெரிவித்துள்ளார்.

நடிகை நமீதாவுக்கு திருமணம் ஆன புதிதிலேயே கர்ப்பமாகி, அந்த கர்ப்பம் கலைந்தது என்ற தகவல் தற்போது தான் தெரிய வந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement