• Jan 19 2025

சரத்குமார் வீட்டில் தடபுடலான திருமண ஏற்பாடுகள்! முக்கிய பிரபலத்திற்கு நேரில் சென்று அழைப்பு

Aathira / 7 months ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் பிரபல நடிகையாக காணப்படும் வரலட்சுமி சரத்குமார். கன்னட மற்றும் தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகையாக திகழ்ந்து வருகின்றார்.

இவர் சரத்குமாரின் முதல் மனைவியான சாயா தேவியின் மகள். 2012 ஆம் ஆண்டு விக்னேஷ் சிவன் இயக்கத்தில் வெளியான நடிகர் சிம்பு நடித்த போடா போடி படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமானார். அந்த படம் ரசிகர்கள் மத்தியில் ஓரளவு வரவேற்பு பெற்றது.

இதை தொடர்ந்து தாரை தப்பட்டை, சண்டைக்கோழி 2, சர்க்கார் உள்ளிட்ட படங்களில் வில்லியாக நடித்து பாராட்டுகளை பெற்றார்.


அத்துடன் தெலுங்கு, மலையாளம், கன்னடம் பல மொழி படங்களிலும் நடித்து பலரது பாராட்டுகளையும் பெற்றுள்ளார். அதிலும் இவர் நடித்த ஹனுமான் திரைப்படம் வசூலிலும்  மிகப்பெரிய சாதனையை படைத்திருந்தது.

இந்த நிலையில், தற்போது வரலட்சுமி சரத்குமாருக்கு தடபுடலாக திருமண ஏற்பாடுகள் நடந்து வரும் நிலையில், விக்னேஷ் சிவன் மற்றும் நடிகை நயந்தாரா என்பவர்களுடன் நடிகர் சர்மா முரளியை நேரில் சந்தித்து திருமண அழைப்பிதழ் கொடுத்துள்ளார்.


இதேவேளை, நடிகை வரலட்சுமி ஏற்கனவே திருமணம் ஆகி பெண் குழந்தை உள்ள நிக்கோலாய்  என்பவரை காதலித்து திருமணம் செய்ய உள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement