• May 05 2024

1950-ல் வெளியான ‘பொன்னியின் செல்வன்’ நாவலின் முதல் பிரதியைப் பார்த்திருக்கின்றீர்களா?

stella / 1 year ago

Advertisement

Listen News!

லைகா புரெடக்ஷன் தயாரிப்பில் இயக்குநர் மணிரத்தினத்தின் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் தான் பொன்னியின் செல்வன். இரண்டு பாகங்களாக உருவாகியுள்ள இப்படத்தின் முதல் பாகமானது வரும் 2022 செப்டம்பர் 30-ஆம் தேதி திரைக்கு வர இருப்பதாக அதிகாப் பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.

சோழப் பேரரசின் அரியணைக்கு வரும் தொடர் ஆபத்துகளும், வீரர்களுக்கும் சதிகாரர்களுக்கும் இடையில் நிகழும் போராட்டங்களும், சாதனைகளும், நகைச்சுவையும், தியாகங்களும் கொண்ட விறுவிறுப்பான கதையான “பொன்னியின் செல்வன்” கதையை திரையில் காண பல கோடி ரசிகர்கள் காத்துக் கொண்டிருக்கிறார்கள்.

இந்த படத்தையொட்டி, பலரும் பொன்னியின் செல்வன் நாவலை தேடித்தேடி படிக்க ஆரம்பித்திருக்கும் நிலையில் பெருமகிழான் எனும் இணையவாசி ஒருவர், தம்முடைய வலைப்பதிவில், “பொன்னியின் செல்வன் கதை முதல்முறையாக 29/10/1950 ஆண்டு கல்கி இதழில் தொடராக வெளியானது. அப்படி வாரவாரம் வெளியான கதையை யாரோ ஒரு நன்றிக்குரியவர் பைண்டிங் செய்து முழுப் புத்தகமாக உருவாக்கியுள்ளார்.

அந்தப் புத்தகம் பலநபர்களைக் கடந்து 16/5/1977 அன்று T.N.காயத்ரி என்பவரிடம் சேர்ந்துள்ளது. அதன் பின் பல தலைமுறைகளைக் கடந்து, 2013-ல்,பெங்களுரில் ஒரு பழைய புத்தக்கடையில், இந்த புத்தகம் என் கை சேர்ந்தது. மீண்டும் ஒரு முறை சோழ தேசம் பயணம்…” என்று குறிப்பிட்டுள்ளார்.

பலரும் கல்கி இதழில் தொடராக வெளியான பொன்னியின் செல்வன் நாவலின் தீவிர வாசகர்களாக இருந்துள்ளனர். இப்போதைய 90ஸ், 2கே கிட்ஸ்களும் தற்போது பொன்னியின் செல்வன் நாவலை, படம் வெளியாவதற்குள் வாங்கி படித்துவிடும் தீவிர ஆர்வத்தில் உள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement

Advertisement