• Jan 19 2025

விஜய்க்காக தங்க தேர் இழுத்த தொண்டர்கள் ! காரணம் என்ன தெரியுமா ?

Nithushan / 7 months ago

Advertisement

Listen News!

பொதுவாகவே ரசிகர்கள் நடிகர்களுக்காக பல செயல்களை செய்து வருவது வழக்கமான ஒன்றாகவே காணப்படுகின்றது. அதிலும் விஜய் ரசிகர்கள் சமீபத்தில் விஜய்க்காக செய்த செயல் பலரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.


தமிழ் சினிமாவில் தவிர்க்கமுடியாத முன்னணி நடிகராக இருப்பவர் விஜய் ஆவார். ரசிகர்களால் தளபதி என அழைக்கப்படும் இவர்  சமீபத்தில் சினிமாவை விட்டு விலகுவதாக கூறி தமிழக வெற்றிக்கழகம் என்ற கட்சியையும் ஆரம்பித்துள்ளார்.


இந்த நிலையிலேயே  தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய்-ன் பிறந்தநாளை முன்னிட்டு மாங்காடு காமாட்சி அம்மன் திருக்கோயிலில் தங்கத்தேர் இழுத்து  ஆலந்தூர் த.வெ.க. நிர்வாகிகள் வழிபட்டுள்ளனர். குறித்த செயல் பெரிய அளவில் பேசுபொருளாக மாறியுள்ளது.

Advertisement

Advertisement