• Jan 19 2025

பிரபாஸ் ஒரு சோம்பேறி.. அவரால் கல்யாணம் செய்ய முடியாது! போட்டுடைத்த பாகுபலி இயக்குனர்

Aathira / 7 months ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் பாகுபலி படத்தின் மூலம் பெரிதும் அறியப்பட்ட நடிகர் தான் பிரபாஸ். இந்த படத்தை பிரபல இயக்குனர் இராஜமௌலி இயக்கி இருந்தார். இதில் கதாநாயகனாக நடித்த பிரபாஸுக்கு விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் மிகப் பெரிய வெற்றியை பெற்றுக் கொடுத்தது இந்த திரைப்படம்.

பாகுபலி திரைப்படத்தை அடுத்து பிரபாஸ் நடித்த படங்கள் பெரிதாக பேசப்படவில்லை. தோல்வியை தான் தழுவியது. ஆனால் தற்போது பிரம்மாண்ட செலவில் உலகநாயகன் கமலஹாசன் உடன் இணைந்து கல்கி 2898 AD  திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த திரைப்படத்திற்கு பெரிதளவில் எதிர்பார்ப்பு காணப்படுகின்றது.

இவ்வாறு சினிமாவில் உச்ச நட்சத்திரமாக இருக்கும் பிரபாஸ் 40 வயதை கடந்த போதிலும் இதுவரையில் திருமணம் செய்து கொள்ளவில்லை இதற்கான காரணமும் கேட்கப்பட்டு வருகின்றது.

இந்த நிலையில், தற்போது பிரபாஸ் ஏன் திருமணம் செய்யவில்லை என்பது பற்றி இயக்குனர் இராஜமௌலியிடம் கேட்கப்பட்டது. அதற்கு அவர் கூறுகையில்,


பிரபாஸ் மிகவும் சோம்பேறி. திருமணம் செய்து கொள்வதிலும் சோம்பேறியாக இருக்கின்றார். அவர் ஒரு பெண்ணை  கண்டுபிடித்து அவருடைய பெற்றோரிடம் பேசுவது அவருக்கு பெரிய வேலையாக இருக்கும். அதனால்தான் அவர் திருமணம் செய்து கொள்ளாமல் இருக்கின்றார் என கூறியுள்ளார்.

ஆனாலும் அண்மையில் பிரபாஸ் கூறுகையில், சோம்பேறி, கூச்ச சுபாவம், மக்களை சந்திக்க முடியாது என்ற மூன்று பிரச்சனைகளும் எனக்கு இருக்குது. ஆனால் நான் நிஜ வாழ்க்கையில் தான் கூச்சப்படுவேன். கேமரா முன்னாடி இல்லை என்று கூறியுள்ளார்.

Advertisement

Advertisement