• Jan 19 2025

கன்னத்தில் அறைவாங்கியதும் மகிழ்ச்சியை தேடியோடிய கங்கனா! வைரல் போட்டோஸ்

Aathira / 7 months ago

Advertisement

Listen News!

பாலிவுட் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வரும் கங்கனா ரனாவத், நடைபெற்ற முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். அதில் தன்னை எதிர்த்துப் போட்டியிட்ட காங்கிரஸ் வேட்பாளரை வீழ்த்தி எம்பி ஆனார்.

பின்பு சத்தீஸ்கர் விமான நிலையத்தில் நடிகை கங்கனாவை பாதுகாப்பு பணியில் இருந்த ஒரு பெண் ஒருவர் கன்னத்தில் அறைவிட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இதன் போது, போராட்டம் நடத்தும் விவசாயிகள் பற்றி கங்கனா சொன்ன கருத்தால்தான் கோபத்தில் தாக்கியதாக அந்தப் பெண் கூறி இருந்தார். இந்த விவகாரம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது இதைத்தொடர்ந்து கங்கனாவை தாக்கிய பெண் காவலர் பணியில் இருந்தும் நீக்கப்பட்டார்.


இந்த நிலையில், நாடாளுமன்ற தேர்தலில் அமோக வெற்றி பெற்று எம்பியாக பதவியேற்ற நடிகை கங்கனா ரனாவத், ஈஷா யோகா மையத்திற்கு சென்றுள்ளார். அங்கு ஆதியோகி சிலையை தரிசனம் செய்த பின் சத்குருவை சந்தித்து ஆசியும் பெற்றுள்ளார்.

தற்போது இந்த படங்கள் வைரலாகி வருகின்றது. அதில் எம்பியாக இருந்தாலும் சத்குருவை பார்த்ததும் அவர் அருகே தரையில் அமர்ந்தபடி அவரிடம் ஆசி பெற்றுள்ளார். மேலும் என்னை மகிழ்விக்கும் இடம் இது என குறிப்பிட்டு அங்கு எடுத்துக் கொண்ட புகைப்படங்களை வெளியிட்டுள்ளார் கங்கனா.


Advertisement

Advertisement