• Oct 26 2025

குக் வித் கோமாளில எலிமினேட் ஆகிட்டேன்.! நள்ளிரவில் உமைர் வெளியிட்ட வீடியோ

Aathira / 1 month ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும்  குக் வித் கோமாளி சீசன் ஆறு நிகழ்ச்சி ஆரம்பித்ததில் இருந்து பரபரப்புக்கு பஞ்சம் இல்லாமல் ஒளிபரப்பாகி வருகின்றது. இதில் 6 போட்டியாளர்கள்  இறுதியாக நிகழ்ச்சியில் இருந்தனர். அதில் லட்சுமி ராதாகிருஷ்ணன், ராஜி,  சபானா, பிரியா ராமன், நந்தகுமாரன் மற்றும் உமைர்  உள்ளிட்டோர் காணப்பட்டனர். 

கடந்த மூன்று வாரமாகவே ஆறு போட்டியாளர்களும் இரண்டு டீம் ஆக விளையாடி வந்தனர்.  இதில்  உமைர், ராஜி, பிரியா ராமன்   ஆகியோர் தோற்று வந்தனர்.  இதனால் ஏற்கனவே சொன்னது போல தோற்ற டீமில் இருந்து ஒருவர் வெளியேற வேண்டும் என கூறப்பட்டது. 

இதைத்தொடர்ந்து மூவருக்கும் இரண்டு வாய்ப்புகள் கொடுக்கப்பட்டன.  இந்த வார தொடக்கத்தில் பிரியா ராமன், ராஜி, உமைர் ஆகிய மூவருக்கும் போட்டி நடந்தது.  அந்த போட்டியில் உமைர் எலிமினேட் செய்யப்பட்டு வெளியேறி இருந்தார். இது பலருக்கும் அதிர்ச்சியை கொடுத்தது. 


இந்த நிலையில்  குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் இருந்து எலிமினேட் ஆகி வெளியே சென்ற உமைர், மாதம்பட்டி ரங்கராஜ் ஸ்டைலில் தான் குக் வித் கோமாளியில் இருந்து எலிமினேட் ஆகி உள்ளதாக  வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.  

ஏற்கனவே மாதம்பட்டி ரங்கராஜன் போல குரோஷி பேசி  வீடியோ ஒன்றை வெளியிட்டு இருந்தார். அதற்கு உனக்கு ரொமான்ஸ் பத்தலடா.. என்கிட்ட ட்ரெய்னிங் வா.. என்று மாதம்பட்டி ரங்கராஜ் அவருடைய போஸ்டில் கமெண்ட் செய்திருந்தார். 

இவ்வாறான நிலையில் தற்போது உமைரும் மாதம்பட்டி ரங்கராஜ் போல  வீடியோ வெளியிட்டுள்ளார். தற்போது இந்த வீடியோ சமூக வலைத்தள பக்கங்களில் வைரல் ஆகி வருகின்றன. 

Advertisement

Advertisement