• Apr 28 2024

படத்தை பார்த்து விழுந்து விழுந்து சிரித்தேன்- பிரின்ஸ் படத்தை பார்த்த பிரபலம் கொடுத்த பெஃஸ்ட் ரிவியூ

stella / 1 year ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத முக்கிய நடிகராகவும் குறுகிய காலத்தில் தனக்கென ஓர் அடையாளத்தையும் உருவாக்கிக் கொண்ட நடிகராக வலம் வருபவர் தான் சிவகார்த்திகேயன். இவர் தற்பொழுது தெலுங்கு இயக்குநர் அனுதீப் குமார் இயக்கத்தில் பிரின்ஸ் என்னும் படத்தில் நடித்து வருகின்றார்.

இவரது நடிப்பில் இறுதியாக வெளியாகிய படங்கள் 100 கோடிக்கு மேல் வசூல் செய்துள்ளதால் இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பும் அதிகமாகவே காணப்படுகின்றது.இந்நிலையில் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளவர் நடிகர் சத்யராஜ், இவர் தற்போது ப்ரின்ஸ் திரைப்படத்தை பார்த்துவிட்டு Review கொடுத்திருக்கிறார்.


அதன்படி நடிகர் சத்யராஜ் அவரின் நண்பர்களிடையே ப்ரின்ஸ் திரைப்படம் ஆரம்பத்தில் இருந்து முடிவு வரை ஒரே காமெடி, விழுந்து விழுந்து சிரித்தேன் என அவர் கூறியதாக இப்போது தகவல் பரவி வருகிறது.   

இந்த தகவல் பிரின்ஸ் படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது எனலாம்.மேலும் இப்படம் வெளியாகும் அதே நாளில் கார்த்தியின் சர்தார் திரைப்படமும் வெளியாகவுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement