மலையாள சினிமாவில் நடிகைகளுக்கு ஏற்பட்ட பிரச்சினைகள் காரணமாக அம்மா அமைப்பில் இருந்து இரண்டு முறை தலைவராகிய மோகன்லால் அந்தப் பதவியில் இருந்து திடீரென பதவி விலகினார். அவர் உடனே 17 பேர் பதவி விலகினார்கள். இதனால் அந்த சங்கம் முழுவதுமாக கலைக்கப்பட்டது. இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.
இதை தொடர்ந்து மலையாள சினிமாவில் இது தொடர்பான பிரச்சனை தீயாய் பரவிய போதும் அதைப்பற்றி இதுவரை மோகன்லால் வாய் திறக்காமல் இருந்தார். தங்கலான் பட நடிகை பார்வதி கூட பிரச்சனையை தீர்க்காமல் பதவியை ராஜினாமா செய்தது கோழைத்தனம் என தைரியமாக ட்விட் பண்ணி இருந்தார்.
இந்த நிலையில், தற்போது மோகன்லால் நான் எங்கேயும் ஓடி ஒழியவில்லை இங்கே தான் இருக்கின்றேன். அம்மா நடிகர் சங்கத்தை மட்டும் இந்த பிரச்சனைக்கு குறை சொல்ல முடியாது. மலையாள திரையுலகம் பாதிக்கப்படக்கூடாது என்பதில் நான் உறுதியாக இருப்பேன்.
மேலும் மலையாள திரையுலகம் பாதிக்க கூடாது என்பதில் நான் உறுதியாக உள்ளேன். ஹேமா கமிட்டி அறிக்கையை நான் முழுதாக வரவேற்கின்றேன். மலையாள சினிமாவில் எழுந்துள்ள பிரச்சனைகள் தொடர்பில் விசாரணை நடந்து வருகின்றது. அண்மையில் நடந்த வயநாடு பேரிடர், கார்கில் போன்ற பிரச்சினைகளுக்கு அம்மா சங்கம் பல்வேறு உதவிகளை செய்தது. இந்த பாலியல் குற்றச்சாட்டில் யாரெல்லாம் தவறு செய்தார்களோ அவர்கள் நிச்சயமாக தண்டிக்கப்படுவார்கள்.
இந்த பிரச்சனை எல்லாத் துறைகளிலும் களையப்பட வேண்டும். இந்த விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு அளிப்பேன் என மோகன்லால் கூறியுள்ளார். இதுவரை மௌனம் காத்த மோகன்லால் இன்று செய்தியாளர்களை சந்தித்து தனது கருத்துக்களை பகிர்ந்து உள்ளார்.
Listen News!