• Jan 21 2025

தமிழ் சினிமாவில் அறிமுகமாகும் மலையாள அழகி! எந்த படத்தில் தெரியுமா?

Aathira / 4 months ago

Advertisement

Listen News!

மலையாள சினிமாவில் பிரபலமான நடிகை தான் சம்ரிதி தாரா. இவர் பல அழகிப் போட்டிகளில் கலந்துகொண்டு பல பட்டங்களை வென்றுள்ளார்.

இந்த நிலையில் தற்போது நடிகை சம்ரிதி தாரா 'மையல்' என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் முதன்முறையாக அறிமுகம் ஆக உள்ளார். தற்போது இது தொடர்பான அறிவிப்பு வெளியாகி  ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றுள்ளது.

இந்த படத்தினை ஏபிஜி ஏழுமலை இயக்கியுள்ளார். இப்படத்தில் நடிகை சம்ரிதி தாரா மைனா படத்தில் போலீஸ் இன்ஸ்பெக்டராக நடித்த நடிகர் சேதுவிற்கு ஜோடியாக நடித்துள்ளார். இப்படம் சமூக பிரச்சனைகளை பற்றி எடுத்துரைக்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது.


அத்துடன் இந்த படத்தில் பிஎல் தேனப்பன், சூப்பர் குட் சுப்பிரமணி ஆகியோர் முக்கிய கேரக்டரில் நடித்துள்ளார்கள். இந்த படத்தின் மொத்த படைப்பு பணிகள் சுமார் 37 நாட்களில் நிறைவடைந்துள்ளதாக கூறப்படுகின்றது.

மேலும் இதன் படப்பிடிப்புகள் திருவண்ணாமலைக்கு அருகில் அமைந்துள்ள கல்வராயன் மலையின் அழகிய இடங்களிலும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளிலும் படமாக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement

Advertisement