• Sep 14 2024

அர்ஜுன் தாஸ் நடிக்கும் புதிய படத்தின் போஸ்டர் ரிலீஸ்! பெயரே சும்மா அதிருதே..!!

Aathira / 2 weeks ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் வெளியான கார்த்தி  நடித்த கைதி திரைப்படத்தில் அறிமுகமானாவர் தான் அர்ஜுன் தாஸ். அதன் வெற்றிக்குப் பிறகு விஜய் உடன் மாஸ்டர் படத்தில் இணைந்து நடித்து இருந்தார். இதைத் தொடர்ந்து அநீதி, ரசவாதி படங்களில் கதாநாயகன் நடித்து பிரபலமானார் .

தற்போது கெம்ப்ரியோ பிக்சஸ் சார்பில் சுதா சுகுமார் தயாரிப்பில் உருவாக்கும் திரைப்படத்தில் அர்ஜுன் தாஸ் நடிக்க கமிட் ஆகியுள்ளார் அவருடன் ஷிவாத்மிகா ராஜசேகர், காளி வெங்கட், நாசர் உள்ளிட்டோர் இப்படத்தில் நடிக்கின்றனர். 

இந்த படத்தை விஷால் வெங்கட் இயக்குகின்றார். மேலும் இந்த படத்திற்கு இமான் இசையமைத்துள்ளார். இந்த திரைப்படம் வாழ்வின் வினோதங்களை பேசும் கமர்சியல் படமாக உருவாக உள்ளது. 


இந்த நிலையில், தற்போது நடிகர் அர்ஜுன் தாஸ் நடிக்கும் படத்திற்கு பாம் என பெயரிடப்பட்டுள்ளது. இதன் முதலாவது போஸ்டரும் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் வரவேற்பு பெற்றுள்ளது.

இந்த படத்தில் ஹீரோயினாக ஷிவாத்மிகா நடிக்கின்றார். அவருடன் முக்கிய கேரக்டரில் காளி வெங்கட் நடிக்கின்றார் என தற்போது தகவல்கள் வெளியாகி உள்ளன.


Advertisement

Advertisement