• May 19 2024

நான் ஒன்றும் குடிச்சிட்டு ஷுட்டிங் போகல அந்த ஷோவில இருந்தும் என்னை எடுக்கல- கண்ணீர் விட்டு அழுத ஓட்டேரி சிவா

stella / 1 year ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் மிகவும் கலகலப்பான சமையல் நிகழ்ச்சி 'குக் வித் கோமாளி'. இந்த நிகழ்ச்சியின் மூன்று சீசன் கடந்த ஆண்டு வெற்றிகரமாக நிறைவடைந்த நிலையில், கடந்த வாரம் நான்காவது சீசன் துவங்கியது.

இதில் கடந்த மூன்று சீசன்களில் கோமாளியாக இருந்த சிவாங்கி, நான்காவது சீசனில் குக்காக அவதாரம் எடுத்துள்ளார். அதேபோல், நடிகை சரி சிருஷ்டி டாங்கே, விசித்ரா, மைம் கோபி, விஜே விஷால், போன்ற பல பிரபலங்கள் குக்குகளாக கலந்து கொண்டு நிகழ்ச்சியை கலகலப்பாக மாற்றி வருகின்றனர்.


மேலும் இந்த முறை  கோமாளிகளாக ஜி பி முத்து, ஓட்டேரி சிவா, சிங்கப்பூர் தீபன், மோனிஷா, நடிகை ரவீனா தாகா, மணிமேகலை, சுனிதா, ஆகியோர் கலந்து கொண்டுள்ளனர்.

இந்நிலையில் குக் வித் கோமாளி சீசன் 4 நிகழ்ச்சியில், கோமாளியாக இருக்கும் ஓட்டேரி சிவா திடீரென இந்த நிகழ்ச்சிகள் இருந்து நீக்கப்பட்டதாக கூறப்படுகிறது.'குக் வித் கோமாளி' ஷூட்டிங் ஸ்பாட்டுக்கு குடித்துவிட்டு வந்து அனைவரையும் முகம் சுழிக்க வைத்ததை தொடர்ந்து அதிரடியாக விஜய் டிவி இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது என கூறப்பட்டது.


இந்த நிலையில் ஓட்டேரி சிவா பிரபல சேனலுக்கு பேட்டியளித்திருந்தார்.அதில் நான் குடித்து விட்டு ஷுட்டிங் போறது என்று எல்லாம் சொல்லுறாங்க ஆனால் அது பொய். நான் குடிப்பதே இல்லை.நான் இவ்வளவு படங்களில் நடித்து வருகின்றேன். முன்னேறி விட்டேன் என எல்லோரும் பொறாமையில் தான் அப்படி எல்லாம் சொல்லுறாங்க.உண்மையில் நான் அப்படிக் கிடையாது. குக்வித் கோமாளி நிகழ்ச்சியில் இருந்து என்னை நீக்கல கூப்பிடுவோம் என்று சொல்லியிருக்கிறாங்க. கண்டிப்பா கூப்பிடுவாங்க என்றும் தெரிவித்தார்.




Advertisement

Advertisement