• Apr 28 2024

பாரதி கண்ணம்மா சீசன் 2 சீரியலில் கண்ணம்மாவாக நடிக்கப் போவது யார் தெரியுமா?- அடடே இவர் ஷு தமிழ் நடிகையாச்சே

stella / 1 year ago

Advertisement

Listen News!

விஜய் தொலைக்காட்சியில்  2019ம் ஆண்டு முதல் ஒளிபரப்பாகி வந்த சீரியல் பாரதி கண்ணம்மா. இந்த சீரியல் கடந்த வாரம் தான் முடிவடைந்தது. சீரியல் முடிவுக்கு வந்தது ரசிகர்களுக்கு கடும் ஏமாற்றமாகவும் இருந்தது.

இந்த நிலையில் இதன் இரண்டாம் பாகம் தற்பொழுது ஒளிபர்பாகி வருகின்றது.இந்த சீரியல் நேற்றைய தினம் தான் ஆரம்பிக்கப்பட்டது. இதில் கதாநாயகனாக பாரதி காரக்டரில் சிப்பு சூர்யன் நடித்து வருகின்றார். அதே போல சித்ரா என்னும் கதாப்பாத்திரத்தில் வினுஜா தேவி நடித்து வருகின்றார்.


 இருவரையும் நேற்றைய தினம் காட்டியிருந்தாலும் வினுஷா சித்ரா என்ற கதாபாத்திரத்தில் நடிக்க கண்ணம்மா வேடத்தில் யார் நடிக்கப் போறாங்க என்ற கேள்வி பரவி வந்தது.இந்த நிலையில் இந்த வேடத்தில்  நடிகை ரேஷ்மா நடிக்கிறாராம். இவர் விஜய் தொலைக்காட்சியில் Mr & Mrs சின்னத்திரை நிகழ்ச்சியில் தனது கணவருடன் கலந்துகொண்டிருந்தார்.


இவர் தான் தொடரில் கண்ணம்மாவாக நடிக்கிறார் என்று கேள்விப்பட்டதும் ரசிகர்கள் அவரது காட்சிகளை காண ஆர்வமாக உள்ளனர்.மேலும் இவர் ஷு தமிழில் ஒளிபரப்பான பூவே பூச்சூடவா என்னும் சீரியலில் கதாநாயகியாக நடித்திருந்தவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.



Advertisement

Advertisement

Advertisement