• Oct 03 2025

பூக்கடை விஷயத்தில் புதிய திருப்பம் .? ரோகிணிக்கு வார்னிங் கொடுத்த சுதா

Aathira / 2 hours ago

Advertisement

Listen News!

சிறகடிக்க ஆசை சீரியலின் இன்றைய எபிசோட்டில், மீனாவின் அம்மா பூக்கடையை இல்லாமல் செய்ததற்காக பிரியாணி வாங்கி சாப்பிடுகிறார். அதனை பார்வதிக்கு கொடுக்க இது பாவம், வேணாம் என்று சொல்லுகிறார். ஆனால் சிந்தாமணி அவருடன் இணைந்து கொண்டாடுகிறார்.

அந்த நேரத்தில் மீனாவின் வண்டியையும் தூக்கி இருக்கலாம் என  விஜயா ஐடியா கொடுக்கிறார். இதனை சிந்தாமணி எடுத்துக் கொண்டு தனது அடியாட்களிடம் சொல்லுகிறார். அதன்பின் ரோகிணியிடம் நடந்தவற்றை சொல்லுகிறார்.

இதை தொடர்ந்து மீனா அவருடைய அம்மா வீட்டுக்கு செல்கிறார். அங்கு மீனாவின் அம்மா  பூக்கடையை நினைத்து அழுது புலம்பிக் கொண்டிருக்கின்றார். அதன் பின்பு அங்கு வந்த சீதாவும் அவருக்கு ஆறுதல் சொல்லுகின்றார். 

அந்த நேரத்தில் இதனை முத்து சமாளிப்பார் என மீனா சொல்ல, இதனை  அருண் பார்த்துக் கொள்வார் என  சீதா சொல்லுகின்றார்.  இதில் அவர்களுக்கு இடையே கருத்து வேறுபாடு வருகின்றது.  இறுதியில்  என்னவென்றாலும் சரி, அம்மாவின் கடை  மீண்டும் அதே இடத்தில் வந்தாக வேண்டும் என உறுதி எடுக்கின்றார்கள். 


அங்கு நடந்தவற்றை மீனா முத்துவிடம் சொல்லுகின்றார். மேலும்  இதை யாரோ காசு கொடுத்து தான் பண்ணி இருக்க வேண்டும் என்று சொல்ல.  முத்துவும் அப்படியாக தான் இருக்க வேண்டும் என்று இதை கண்டுபிடிக்க ஒரு ஐடியா கொடுக்கின்றார். 

இன்னொரு பக்கம் ஸ்ருதி ரோகிணியின் ஸ்டோர் ரூமுக்கு செல்லுகின்றார். அங்கு  டிவி வாங்க   விலையை குறைத்து பேசுகிறார். ஆன்லைனில் குறைவாக இருப்பதை காட்டி அதைவிட குறைவாக தருமாறு  கேட்கின்றார். 

அந்த நேரத்தில் ஸ்ருதியின் அம்மா ரோகிணிக்கு கால் பண்ணுகின்றார். இதை பார்த்த ஸ்ருதி எதற்காக அம்மா கால் பண்ணுகின்றார்  என்று கேட்க, ஸ்டோர் ரூம் வருவதாக சொல்லுகின்றார் .  அதற்கு அம்மா  இப்படி ஆன சின்ன கடைக்கு வர மாட்டாங்களே என்று சொல்கின்றார்.  இதைக் கேட்ட ரோகிணி மனதுக்குள், அப்படி என்றால் நீ எதற்கு இங்கு வந்து விலையை குறைத்து கேக்கிறா என்றுதிட்டுகிறார்,

 

அதன்பின்பு ஸ்ருதியின் அம்மா ரோகிணியிடம் கொடுத்த பணத்தை மீண்டும் கேட்கின்றார். அதற்கு ரோகிணி டைம் கேட்கவும் முடியாது எனக்கு உடனடியாக வேண்டும் என்று சொல்லுகின்றார். இதுதான் இன்றைய எபிசோட்.

Advertisement

Advertisement