அக்டோபர் 2, 2025 அன்று திரையரங்குகளில் வெளியான ‘காந்தாரா: சாப்டர் 1’ திரைப்படம், விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் அதிரடியான வரவேற்பைப் பெற்றுள்ளது. ரிஷப் ஷெட்டி நடிப்பிலும், இயக்கத்திலும் வெளிவந்துள்ள இப்படம், அதன் வெளியீட்டின் முதல் நாளிலேயே ரூ.65 கோடி வசூல் செய்து இந்திய சினிமாவில் ஒரு புதிய சாதனையை நிகழ்த்தியுள்ளது.
‘காந்தாரா: சாப்டர் 1’ என்பது 2022-ம் ஆண்டு வெளியான ‘காந்தாரா’ திரைப்படத்தின் ப்ரீக்வெல் (Prequel) ஆகும். முதல் பகுதியில் பாரம்பரிய தெய்வ வழிபாடு, காட்டுப் பகுதி வாழ்க்கை மற்றும் மனிதனுக்கும் இயற்கைக்கும் இடையேயான உறவை மையமாகக் கொண்டு அமைந்த இந்தக் கதை, உலகளவில் பாராட்டுதல்களைப் பெற்றது.
இப்போது, ‘சாப்டர் 1’ படத்தில் அந்த மாயா உலகத்தின் தோற்றம், தெய்வத்தின் துவக்கம் மற்றும் பூர்வீக கதைப்பகுதியை ஆழமாக எடுத்துரைக்கிறார் இயக்குநரும் கதாநாயகனுமான ரிஷப் ஷெட்டி.
திரைப்படத்தின் முதல் நாள் வசூல் ரூ.65 கோடி என்று அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டது கன்னட மொழிப் படத்திற்கு கிடைத்த மிகப்பெரிய ஓப்பனிங் என்றே கூறப்படுகிறது. அத்துடன் இப்படம் வெளிநாடுகளிலும் வசூலை அள்ளிக்குவித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
Listen News!