ஹிந்தியில் ஒளிபரப்பாகும் பிக் பாஸ் சீசன் 18ன் நிகழ்ச்சியில் குக் வித் கோமாளி பிரபலமான நடிகை ஸ்ருதிகா கலந்து கொண்டுள்ளார். பிரீஸ் டாஸ்க்கின் போது ஸ்ருதிகாவை பார்த்துவிட்டு வந்த அவரின் கணவர் அர்ஜுன்-ஸ்ருதிகா பற்றி நிறைய விடயங்களை சமீபத்திய பேட்டியில் ஓபனாக பேசியுள்ளார்.
விஜய் டிவி பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு வருவார் என்று எதிர்பார்த்த நிலையில் ஹிந்தி பிக்பாஸ் சீசன் 18ன் நிகழ்ச்சிக்கு சென்று விட்டார். இதுவரைகாலமும் மிக சிறப்பாக விளையாடி வரும் ஸ்ருதிகா குறித்து அவரின் கணவர் அர்ஜுன் சமீபத்திய பேட்டில் நெகிழ்ச்சியாக பகிர்ந்துள்ளார்.
அவர் கூறுகையில்" ஹிந்தி பிக்பாஸ் போறேன்னு சொல்லும் போதே எல்லாரும் யோசிச்சோம் ஏன்னா அங்க வாரவங்க எல்லாமே அங்க ஒரு செலிபிரிட்டிஷ் சோ தமிழ் பொண்ணு அங்க போறாங்கன்னு சொல்லும் போது நிறைய யோசிச்சோம் ஆனா அவங்க இருக்குற வரைக்கும் இருப்போம் வோட் மக்கள் பார்த்துப்பாங்க என்று உறுதியா இருந்தாங்க. நான் ஸ்ருதிகாவை பிரிந்து இருந்தது இல்லை அதுனால அழுதுட்டேன் என்று கூறினார்.
மேலும் " அங்க ரொம்ப ஸ்ட்ரெஸ் ஆகி நான் வீட்டுக்கு போறேன்னு அழுதா அத எல்லாம் பார்க்கவே முடியல நானும் அழுதேன். முதல் தடவை ஸ்ருதிகா சுறுதுறுனு ஜாலியா இருப்பதை பார்த்துட்டு என்ன இவங்க இப்படி பண்ணுறாங்க, பொய்யா நடிக்கிறாங்க என்று சொன்னாங்க உடனே நம்ம பசங்க குதிச்சி அவங்கள பத்தி உங்களுக்கு என்னடா தெரியும் அப்டினு வீடியோஸ் போட்டு கமென்ஸ் எல்லாம் பண்ணாங்க. கிட்ட தட்ட 80 நாட்கள் கடந்து போயிட்டு இன்னும் ஒரு 3 வாரம் போனா பின்னாலே வந்துரும். இது வரைக்கும் அங்க இருந்ததே வெற்றிதான் என்று கூறியுள்ளார்.
Listen News!