• Mar 16 2025

பிரபாஸ் திருமணத்தில் ஆர்வம் காட்டாமைக்கான காரணம் இது தானா..? கண்கலங்கிய அம்மா..

Mathumitha / 2 months ago

Advertisement

Listen News!

பாகுபலி படத்தின் வெற்றியின் பின் அதிக  தமிழ் ரசிகர்களை தன வசமாக்கிய பிரபாஸ் தற்போது கல்கி எனும் படத்தில் நடித்திருந்தார்.600 கோடி பட்ஜெட்டில் தயாரிக்கப்பட்ட இப் படம் தற்போது கிட்டத்தட்ட 1200 கோடி வரை வசூல் செய்து சாதனை படைத்துள்ளது.தெலுங்கு சினிமாவின் வசூல் நாயகனாக வலம் வரும் இவர் தொடர்ந்து பல படங்களில் நடிப்பதற்கு கமிட்டாகியுள்ளார்.


இந்நிலையில் இவரது அம்மா சிவகுமாரி தற்போது பேட்டி ஒன்றில் பிரபாஸ் குறித்து பேசியுள்ளார்.அதில் அவர் இன்னும் ஏன் திருமணம் செய்து கொள்ளவில்லை என்பதற்கான காரணத்தினை கூறியுள்ளார்.


குறித்த பேட்டியின் போது "பிரபாஸிற்கு ரவி என்கிற மிகவும் நெருக்கமான நண்பன் இருக்கிறார். அவரது திருமண வாழ்க்கை அவ்வளவு நன்றாக இல்லை.மிகவும் போராட்டங்கள் நிறைந்ததாக இருந்தது.இருப்பினும் கடைசியில் கசப்பான முடிவுடன் அது அமைந்துவிட்டது. பிரபாஸை அது ரொம்பவே பாதித்தது. இதனால் திருமண வாழ்க்கை என்றாலே இப்படித்தான் இருக்குமோ விரைவில் அது முறிந்து விடுமோ என்கிற ஒரு எண்ணம் பிரபாஸின் மனதில் ஆழமாய் பதிந்து விட்டது. அதனாலயே திருமணத்தில் அவர் அவ்வளவு ஆர்வம் காட்டுவது இல்லை. இருந்தாலும் ஒரு நாள் அவர் மனம் மாறும்" என மிகவும் கவலையுடன் குறிப்பிட்டுள்ளார்.

Advertisement

Advertisement