• Mar 17 2025

நீங்க பண்ணது மட்டும் தப்பு இல்லையா முத்து! வெளுத்து வாங்கும் விஜய் சேதுபதி!

subiththira / 2 months ago

Advertisement

Listen News!

விஜய் தொலைக்காட்ச்சியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் சீசன் 8 நிகழ்ச்சியின் மூன்றாவது ப்ரோமோ ரிலீஸாகியுள்ளது. அதில் என்ன நடக்கிறது என்று பார்ப்போம். 


விஜய் சேதுபதி போட்டியாளர்களிடம் எத்தனை பேருக்கு தெரியும் முத்து கார்ட் எடுத்து ஒட்டி இருக்கார் என்பது என்று கேட்கிறார். போட்டியாளர்கள் அதிர்ச்சியாகி இல்லை தெரியாது என்று சொல்கிறார்கள். "முத்து ஜெய்கிறதுக்காக கூட்டணியா விளையாண்டமாதிரி இருக்கு" என்று பவித்ரா சொல்கிறார். "முத்து நினைக்கிறமாதிரி கேம் ஒரு பக்கமா போகுதோனு தோணுது" என்று மஞ்சுரி சொல்கிறார். 


"ஹோல்டுன்னு சொன்னதுக்கு அப்பறம் அவங்க எடுத்தாததால எனக்கு அது தப்பா தெரிஞ்சது சார்" என்று முத்து சொல்கிறார். அதற்கு விஜய் சேதுபதி "ஹோல்ட் பண்ணுறது எப்படி நீங்க ரெப்பிரி இல்லையே, யாரும் நீங்க ரெபிரினு சொல்லையே. பவித்ரா எடுத்ததற்கு பிறகு கார்ட் இல்லையே. உங்களுக்கு தப்புகிறது உங்களுக்கு தெரிஞ்சி தப்பில்லையா? உங்களுக்கு மேல இருந்து ஒரு குரல் வந்தால் தான் தப்பா" என்று சரமாரியாக கேட்கிறார். அத்தோடு ப்ரோமோ முடிவடைகிறது.   




Advertisement

Advertisement