தமிழ் சினிமாவில் மாரி செல்வராஜ் நான்கு படங்களை இயக்கியிருந்தாலும் ரசிகர்கள் மனதில் நீங்கா இடம் பிடித்து விட்டார். தற்போது ஒடுக்கப்பட்ட மக்களின் வலியை அவர்களோடு வாழ்ந்தவராக சொல்லுவதால் ரசிகர்கள் மத்தியில் எளிதாக அந்த விடயம் சென்றடைகின்றது.
அப்படிப்பட்ட ஒரு கதை தான் வாழை. இந்த படம் பிரபலங்கள் மத்தியில் மட்டும் இன்றி சாதாரண மக்களிடம் இருந்தும் பிரபலங்களிடமிருந்தும் நல்ல வரவேற்பை பெற்று வருகின்றது. படத்திற்கான வசூலும் நாளுக்கு நாள் அதிகரிக்கின்றது. இந்த படத்தில் கலையரசன், திவ்யா துரைசாமி, நிகிலா விமல் ஆகியோர் முக்கிய கேரக்டரில் நடித்துள்ளார்கள்.
இந்த படத்தை பார்த்த இயக்குனர் பாலா, நடிகர் சூரி ஆகியோர் மாரி செல்வராஜுக்கு முத்தம் கொடுத்து தமது பாராட்டை வெளிப்படுத்தி இருந்தார்கள்.. தொடர்ந்தும் அவருக்கு பாராட்டுக்கள் குவிந்தவாறே உள்ளன.
கடந்த 23ஆம் தேதி வெளியான இந்த திரைப்படம் முதல் இரண்டு நாட்களிலேயே 3.65 கோடிகளை வசூலித்தது. தற்போது இதுவரையில் மொத்தமாக 7. 65 கோடிகளை வசூலித்துள்ளதாம்.
தற்காலத்தில் நடிகர்கள் முக்கியமல்ல நல்ல கதையை கொடுங்கள் என்று தான் ரசிகர்கள் எதிர்பார்க்கின்றார்கள். அந்த கருத்தை வாழைப்படம் நிரூபணம் செய்துள்ளது. இதற்கு பலரும் பாசிட்டிவ் விமர்சனங்களை அழித்து வருகின்றார்கள்.
இந்த நிலையில், வாழையை வாழ வைக்க எத்தனை ஜாதிக்காரன் தேவைப்படுகின்றான் என பிரவீன் காந்தி விமர்சனம் செய்துள்ளார்.
அதன்படி பாலா - தேவர் ,சரத்குமார் - நாடார், சிம்பு - உடையார், நெல்சன்- கிறிஸ்டியன், மிஷ்கின் எந்த ஜாதியினே தெரியல என பிரவீன் காந்தி வாழை திரைப்படத்திற்கு தனது விமர்சனத்தை முன் வைத்துள்ளார்.
Listen News!