சினேகா வீட்டில் ஒன்று கூடிய திரைப்பிரபலங்கள்… அப்படி என்னதான் விசேஷம்…வைரலாகும் புகைப்படங்கள்..!

தமிழ் சினிமாவின் சிரிப்பழகி என்றால் அது நம்ம சினேகா தான். இதனால் தான் ரசிகர்கள் இவரை அன்றிலிருந்து இன்றுவரை புன்னகையரசி என அழைத்து வருகின்றனர். தனது சிரிப்பாலும், நடிப்பாலும் இளைஞர்கள் பலரின் மனதை கொள்ளை அடித்த இவருக்கு ஏராளமான ரசிகர் கூட்டமும் உண்டு. பல முன்னணி ஹீரோக்களுடனும் ஜோடி சேர்ந்து நடித்துப் பல விருதுகளையும் வென்றிருக்கின்றார்.

இவ்வாறாக நடிப்பில் சிறந்து விளங்கிய இவர் தற்போது நடிப்பதை நிறுத்தி விட்டார். அதாவது நடிகர் பிரசன்னாவை காதலித்து திருமணம் செய்து கொண்டு மகிழ்ச்சியாக கணவன், பிள்ளைகள் எனத் தன்னுடைய குடும்பத்தை கவனித்து வருகிறார். இவர்களின் காதலுக்கு அடையாளமாக விகான் என்ற அழகிய மகனும் ஆத்யாந்தா என்ற அழகிய மகளும் உள்ளனர்.

சமூக வலைத்தளத்தில் எப்போதுமே ஆக்டிவாக இருந்து வருகின்ற சினேகா அவ்வப்போது தன்னுடைய மகள் மற்றும் மகனுடன் எடுத்து கொள்ளும் புகைப்படத்தை சமூக வலைத்தளத்தில் வெளியிட்டு மகிழ்ச்சியை வெளிப்படுத்தி வருவார்.

அந்த வகையில் சமீபத்தில் கூட தன்னுடைய தந்தையின் பிறந்தநாளை, ஆதரவற்றோர் இல்லத்தில் உள்ள குழந்தைகளுடன் மிகவும் சிறப்பாக கொண்டாடி தந்தைக்கு இன்ப அதிர்ச்சியினைக் கொடுத்திருந்தார்.

இந்நிலையில் ஒவ்வொரு ஆண்டும் வரலட்சுமி நோன்பு சிறப்பாக கொண்டாடுவதை வழக்கமாக வைத்துள்ளார் சினேகா. அந்த வகையில் நேற்றைய தினம் இந்தப் பூஜை இடம்பெற்றிருந்தது. அதாவது இந்த ஆண்டு ஒரு சில பிரபலங்களும் சினேகா வீட்டில் நடந்த வரலட்சுமி பூஜையில் கலந்து கொண்டுள்ளனர்.

அதில் குறிப்பாக நடிகை ப்ரீத்தா ஹரி, சரண்யா பொன்வண்ணன், இயக்குநர் பாலாவின் முன்னாள் மனைவி முத்துமலர் உள்ளிட்ட பலர் சினேகா வீட்டு வரலட்சுமி பூஜையில் கலந்து கொண்டு சிறப்பித்துள்ளனர்.

இவ்வாறாக பல பிரபலங்களும் கலந்து சிறப்பித்திருந்த இந்நிகழ்வு குறித்த சில புகைப்படங்கள் தற்போது சமூக வலைத்தளத்தில் வெளியாகி உள்ளன. இதனைப் பார்த்த ரசிகர்கள் தமது லைக்ஸ்களை அள்ளிக் குவித்து வருவதோடு அவர்களின் நட்பை பாராட்டி கமெண்டுகளையும் செய்து வருகின்றனர்.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில்:

RELATED ARTICLES

spot_img
spot_img

அதிகம் படித்தவை

திரை விமர்சனம்