• Sep 11 2025

நீதித்துறையை விமர்சித்த சீமான்...!உயர்நீதிமன்றம் எடுத்த அதிரடி முடிவு....!

Roshika / 3 weeks ago

Advertisement

Listen News!

நீதித்துறையை அவமதிக்கும் வகையில் பேசியதாக நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது வழக்கு பதிவு செய்ய காவல்துறைக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.


2024 ஆம் ஆண்டு நவம்பர் மாதம், ஒரு யூடியூப் சேனலுக்கான பேட்டியில் சீமான், நீதித்துறை மற்றும் அதன் செயல்பாடுகள் குறித்து கடுமையான விமர்சனங்களையும், ஆபாசமான வார்த்தைகளையும் பயன்படுத்தியதாக வழக்கறிஞர் சார்லஸ் அலெக்சாண்டர் பொலிஸில் புகார் அளித்திருந்தார்.


இந்த புகாருக்கு பொலிஸார் எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கவில்லை என்ற காரணத்தால், புகாரின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்ய வேண்டுமெனக் கோரி, அவர் எழும்பூர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்திருந்தார்.

இந்நிலையில், அந்த மனுவை எழும்பூர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. இதையடுத்து சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டு, அப்புகாரை அடிப்படையாகக் கொண்டு நடவடிக்கை எடுக்க காவல்துறைக்கு நேரடி உத்தரவு வழங்கப்பட்டுள்ளது.

இந்த விவகாரம் தமிழ்நாட்டு அரசியலிலும், நீதித்துறையின் செயல்பாடுகள் குறித்த பொதுநல விவாதத்திலும் புதிய சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement

Advertisement