பாக்கியலட்சுமி இன்றைய எபிசொட்டில் , பிறந்தநாள் கொண்டாட்டத்தின் போது இனியா லைட்ஸ் ஓப் பண்ணச் சொல்லிட்டு தான் சப்ரைஸா எடுத்த வீடீயோவை எல்லாருக்கும் முன்னால போட்டுக் காட்டுறாள். அந்த வீடியோல பாக்கியாவுக்கு படிப்பிச்ச சார் மற்றும் பிரண்ட்ஸ் என எல்லாரும் அவாவுக்கு விஷ் பண்ணி இருந்தார்கள். அதைப் பார்த்தவுடன் பாக்கியாவுக்கு கண்ணே கலங்கிட்டு. குறிப்பாக அதில செல்வி கதைத்த வார்த்தைகளை கேட்டவுடன் பாக்கியா ரொம்பவே வருத்தப்பட்டார்.
அத்துடன் இன்டைக்கு அழவே கூடாதுனு நினைச்சேன் ஆனால் அழவச்சிட்ட என்று கூறிக்கொண்டு இனியாவுக்கு முத்தம் கொடுத்திட்டு இது மாதிரி ஒரு சந்தோசம் எனக்கு இவ்வளவு நாளை இருந்ததே இல்லை என்றார். பிறகு ஈஸ்வரி உங்க அம்மாக்கு நீ மட்டும் தானா சப்பிரைஸ் கொடுப்ப நானும் கொடுப்பேன் என்று இனியாட்ட இருந்த மைக்க தான் வாங்குறா. அத வாங்கிட்டு தன்ர மருமகளுக்கு நான் வீட்ட வச்சு விஷ் பண்ணிட்டன் ஆனா இங்க வச்சு தான் பரிசைக் கொடுப்பேன் என்றார்.
உடனே செல்வி இந்த தங்கத்துக்கு நீங்கள் என்ன தங்கமோ வைரமோ கொடுக்கப் போறீங்கள் என நக்கலாக கேட்டார். அதுக்கு ஈஸ்வரி ஜேய் கொஞ்சநேரம் சும்மா இருடி என்றார். பின் ஈஸ்வரி சொன்னா, பாக்கியா பிறந்தநாள் கொண்டாட வெளிக்கிட்ட போது நான் நினச்சேன் ஏன் இந்த வயசுல பிறந்தநாள் என்று ஆனால் இப்பதான் தெரியுது கண்டிப்பாக பிறந்தநாள் செய்யவேணும் என்றார்.
பிறகு ஈஸ்வரி கோபியை அழைத்து பாக்கியாவிற்கு பக்கத்தில கூட்டிக் கொண்டு வந்து நிறுத்தி விட்டு பாக்கியாவும் கோபியும் இணையப் போகின்றார்கள் எனக் கூறுகிறார். இதைக் கேட்டதும் அனைவரும் ஆச்சரியப்படுகின்றார்கள். இதைக் கேட்டவுடன் பாக்கியாவின் குடுப்பத்தைத் தவிர ஏனையவர்கள் சந்தோசப்படுகின்றார்கள்.
அதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் பாக்கியா மைக்கை வாங்கி தான் கடந்த கால வாழ்க்கையை பற்றி எல்லாம் யோசிக்க மாட்டேன் எனக் கூறினார். அத்துடன் முடிஞ்சு போன கதையை திரும்ப தொடங்க எனக்கு விருப்பம் இல்லை என்றார். இனி என்ட வாழ்க்கையில ஒரு ஆணோ அல்லது கல்யாணமோ இல்லை என்றார். இது தான் இன்றைய எபிசொட்.
Listen News!