• Jan 19 2025

செக் வழக்கில் பிடிவாரண்ட்.. நீதி மன்றத்தில் சரணடைந்த பவர் ஸ்டார்! ஏன் தெரியுமா?

Aathira / 10 months ago

Advertisement

Listen News!

ராமநாதபுரம் தேவிபட்டிணத்தை சேர்ந்த முனியசாமி என்பவர் இரால் பண்ணை வைத்து நடத்தி வரும் நிலையில், அந்த தொழிலை மேம்படுத்துவதற்காக 15 கோடி ரூபா கடன் வாங்கி தருவதாக அவருக்கு நடிகர் பவர் ஸ்டார் சீனிவாசன் கூறியுள்ளார்.

ஆனாலும், அதற்கு ஆவண செலவுக்காக 14 லட்சம் தர வேண்டும் என கூறி கடந்த 2019 ஆம் ஆண்டு முனியசாமியிடம் பணத்தை  பெற்றுள்ளார்.

இதை தொடர்ந்து, போலியான ஒரு காசோலையும் கொடுத்து கடனும் வாங்கி கொடுக்காமல், தான் பெற்றுக்கொள்ள 14 லட்சத்தையும் திருப்பிக் கொடுக்காமல் முனியசாமியை அழைய விட்டுள்ளார் பவர் ஸ்டார்.


இதையடுத்து பணத்தை வாங்கிவிட்டு போலி செக் கொடுத்ததாக சீனிவாசன் மீது முனியசாமி நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கின் விசாரணை தொடர்ந்து வந்த நிலையில், அதற்கு ஆஜராகாமல் இருந்து வந்துள்ளார்சீனிவாசன்.

இதை அடுத்து கடந்த டிசம்பர் மாதம் செக் மோசடி வழக்கு விசாரணையில் பவர் ஸ்டார் ஆஜராகாமல் இருந்ததற்காக அவருக்கு பிடிவாரண்ட் பிறப்பிக்கப்பட்டது.

இந்த நிலையில், தற்போது ராமநாதபுரம் நீதிமன்றத்தில் தனக்கு  பிறப்பிக்கப்பட்ட பிடிவாரண்டை ரத்து செய்யக் கோரி தற்போது நீதிமன்றத்தில் ஆஜராகி உள்ளார் பவர் ஸ்டார் சீனிவாசன்.

Advertisement

Advertisement