• May 20 2024

அனுவுக்கு கல்யாணம் பண்ணி வைக்க மாப்பிள்ளை செலக்ட் பண்ணீட்டாங்களா?- அதிர்ச்சியில் கார்த்திக்

stella / 1 year ago

Advertisement

Listen News!


சன்டிவியில் சூப்பர் ஹிட்டாக ஓடிக் கொண்டிருக்கும் சீரியல் தான் சுந்தரி. கிராமத்தைச் சேர்ந்த பெண் ஒருவர் தனது கனவுகளை அடைய எப்படியெல்லாம் முயற்சிக்கின்றார் என்பதையே இந்த சீரியல் எடுத்துக் காட்டுகின்றது.

கார்த்திக் பற்றிய ரகசியம் இன்னும் அனுவுக்கும் முருகன் மாமாவுக்கும் மாத்திரம் தெரியவில்லை. இவர்கள் இருவருக்கும் தெரிந்தால் என்ன நடக்கும் அனு என்ன முடிவு எடுப்பார் என்ற எதிர்பார்ப்பில் ரசிகர்கள் இருக்கின்றனர்.


இப்படியான நிலையில் கார்த்திக் பற்றிய ரகசியம் எப்படியாவது அனுவுக்கு தெரிய வேண்டும் என்பதற்காக அனுவின் நண்பன் பல வேலைகளை செய்து வருகின்றார். 

அந்த வகையில் தற்பொழுது அனுவுக்கு மாப்பிள்ளை பார்க்கப் போவதாக போட்டோவைக் கொண்டு வந்து காட்டுகின்றார். இதனைப் பார்த்த கார்த்திக் கடுப்பாகி அவரது சட்டையைப் பிடிக்கின்றார்.இது குறித்த ப்ரோமோ  வெளியாகி ரசிகர்களைக் கவர்ந்து வருவதைக் காணலாம்.

Advertisement

Advertisement