• Sep 21 2024

இயக்குநர் ஷங்கரின் திருமண புகைப்படத்தை பார்த்துள்ளீர்களா-அதில் யார் யார் உள்ளார்கள் தெரியுமா..?

Aishu / 2 years ago

Advertisement

Listen News!

இந்திய சினிமாவில் தனக்கென ஒரு இடத்தை பிடித்து தற்போது வரை பிரம்மாண்ட இயக்குநராக திகழ்ந்து வருகின்றார்.

ஜென்டில்மேன் திரைப்படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமான ஷங்கர் இதனைத் தொடர்ந்து தனது திரைப்படங்களின் பிரம்மாண்டத்தை ரசிகர்களுக்கு கொடுத்து இந்திய சினிமாவே கொண்டாடும் ஒரு இயக்குநராகி இருக்கிறார்.

அத்தோடு 2.0 திரைப்படத்திற்கு பின் இந்தியன் 2 திரைப்படம் உருவாகவிருந்த நிலையில் அப்படம் பாதியிலே நிறுத்தப்பட்டது. அதன்பின் ஷங்கர் ராம் சரணை வைத்து RC15 திரைப்படத்தை இயக்கி வந்தார்.

எனினும் அதனையடுத்து ஷங்கர் மீண்டும் கைவிடப்பட்ட இந்தியன் 2 திரைப்படத்தை இயக்கி இருக்கிறார். மேலும் இது குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் வருமென எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் பிரபலங்களின் அன்சீன் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாவது வழக்கம். அந்த வகையில் இன்று தனது 53-வது பிறந்தநாளை கொண்டாடும் ஷங்கரின் திருமண புகைப்படம் இணையத்தில் பரவி வருகிறது.

அத்தோடு இயக்குநர் ஷங்கர், ஈஸ்வரி ஷங்கர் திருமண ஜெயலலிதா கலந்து கொண்டுள்ளார். அந்த புகைப்படத்தை நீங்களே பாருங்கள்




Advertisement

Advertisement