• Jan 15 2025

நீ ஏற்கனவே பிரக்னண்டா இருந்தியா..? ரோகிணியை வெளுத்து வாங்கியா மனோஜ், விஜயா

Aathira / 5 months ago

Advertisement

Listen News!

சிறகடிக்க ஆசை சீரியலின் இன்றைய எபிசோட்டில், மீனா எனது தங்கச்சிக்காக மட்டும் இல்லை ரோகிணிக்காகவும் தான் கேசரி செய்தேன் என சொல்ல, எல்லாரும் குழம்பி போய் இருக்கின்றார்கள். இதன்போது ரோகிணி அம்மாவாக போவதாக மீனா சொன்னதும் ஏன் என்னிடம் சொல்லவில்லை என்று விஜயா கேள்வி மேல் கேள்வி கேட்கின்றார்.

அண்ணாமலையும் இந்த சந்தோஷமான விஷயத்தை சொல்லி இருக்கலாம் தானே என சொல்ல, மனோஜ் தனக்கே தெரியாது என்று சொல்கின்றார். ரோகினி இறுதியில் நான் பிரக்னண்டா இல்ல உங்களுக்கு யார் சொன்னது இது பொய் என மீனாவுக்கு பேசுகின்றார்.

இதனால் விஜயாவும் அறிவு கெட்டவளே என மீனாவுக்கு பேசுகிறார். மேலும் ரோகினியும் மனோஜும் கோபத்தில் கேசரியை வைத்துவிட்டு ரூமுக்கு செல்கின்றார்கள்.

அங்கு ரோகினி தனக்கு குழந்தை ஞாபகமாகவே இருக்கின்றது என்று பேசி, இரண்டு பேரும் ஒரு செக்கப் பண்ணி விட்டு வரலாம்  என மனோஜை அழைக்க, நான் எதற்கு வரணும். நான் பர்ஃபெக்ட்டா தான் இருக்கிறேன் என்று மறுக்கிறார்.


இதனால் கோபப்பட்ட ரோகினி நீயும் ஜீவாவும் லிவிங் டு கெதர்ல இருந்த போது ஜீவா பிரகனண்ட் ஆனாரா? என கேட்கின்றார். இதனால் கோபப்பட்ட மனோஜ் அப்படி என்றால் நீயும் வெளிநாட்டில் இருந்து தான் வந்தா.. நீயும் ஏற்கனவே கர்ப்பமானியா? இல்ல கல்யாணம் பண்ணியா என்று கேள்வி கேட்கிறார்.

இதனால் கோவப்பட்ட ரோகிணி என்ன இப்படி எல்லாம் பேசுற என அழுகின்றார். அதன் பின்பு சமாதானமாகி நான் பேசியது தப்புதான் என்னை மன்னித்துவிடு என இருவரும் மாறி மாறி சமாதானமாகி கொள்கின்றார்கள்.

இதைத் தொடர்ந்து மனோஜ் ரோகினி பேசிய விடயங்களை நினைத்து ஹாலில் உட்கார்ந்து கொண்டிருக்க, அங்கு வந்த விஜயா விசாரிக்கவும் அவர் நடந்தவற்றை சொல்லி விடுகின்றார். இதனால் கோபப்பட்ட விஜயா நேரே ரோகினியிடம் சென்று, உன் மேல எனக்கு மரியாதை இருக்கு. நீ எப்படி மனோஜ்ஜ நடத்துறியோ அதை பொறுத்து தான் உனக்கு மரியாதை தருவேன். இப்ப மனோஜ் கிட்ட இப்படி கேள்வி கேட்டிருக்கா? நீயும் தான் வெளிநாட்டில் இருந்து வந்தா.. நாங்க கேட்டோமா நீ யாரோடையும் பழகி இருக்கியா? ஏற்கனவே உண்டாக்கி இருக்கியா என்று இதனால் ரோகிணி அதிர்ச்சி அடைந்து நிற்கின்றார் . இதான் இன்றைய எபிசோட்.

Advertisement

Advertisement