• Sep 21 2024

நயன்-விக்கி ரசிகர்களுக்கு வெளியான மகிழ்ச்சி செய்தி-அதுக்கிடையிலேயா..?

Aishu / 2 years ago

Advertisement

Listen News!

தென்னிந்திய திரையுலகின் முன்னணி நடிகையான நயன்தாரா இயக்குநர் விக்னேஷ் சிவன் இருவரும் கடந்த 7 ஆண்டுகளாக காதலித்து வந்த நிலையில், கடந்த ஜூன் 9-ம் தேதி இருவரும் திருமணம் செய்துகொண்டனர். மேலும் இவர்களது திருமணம் சென்னை மகாபலிபுரம் பகுதியிலுள்ள நட்சத்திர ஹேட்டலில் நடைபெற்றது.

கோலிவுட் வட்டாரத்தில் நட்சத்திர காதல் ஜோடிகளாக நயன் – விக்கி இருவரும் வலம் வந்தனர். ரசிகர்கள் மட்டுமல்லாமல் கோடம்பாக்கத்தினரும் நயன்தாரா, விக்னேஷ் சிவன் இருவரின் திருமணத்தையும் எதிர்பார்த்து காத்து கொண்டிருந்தனர். எனினும் இந்நிலையில் விக்னேஷ் சிவன் மற்றும் நயன்தாரா திருமணம் கடந்த மாதம் பிரம்மாண்டமாக நடைபெற்றது.

மேலும் நயன் – விக்கி திருமணம் முதலில் திருப்பதியில் நடத்த முடிவு செய்யப்பட்டது. ஆனால் அங்கு ஏகப்பட்ட கட்டுப்பாடுகள் இருந்ததால், மகாபலிபுரத்தில் உள்ள 5 நட்சத்திர ஹோட்டலான ஷெரட்டன் பார்க்கில் கடும் கட்டுப்பாடுகளுடன் நடைபெற்றது.

இவர்களின் திருமண வீடியோவை நெட்பிளிக்ஸ் மிகப்பெரிய தொகைக்கு வாங்கியதாகவும், விரைவில் நயன்தாராவின் திருமண வீடியோ நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாகுமென்றும் தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில் கடந்த சில நாட்களாகவே நயன்தாரா, விக்னேஷ் சிவன் திருமண ஒப்பந்தத்தை நெட்பிளிக்ஸ் முறித்துவிட்டதாக தகவல்கள் வெளியாகி பரபரப்பை கிளப்பின. தற்போது இதனை விக்னேஷ் சிவன் தரப்பினர் மறுத்துள்ளனர். மேலும் நயன்தாரா, விக்னேஷ் சிவன் திருமண நிகழ்வின் முதல் சீசன் விரைவில் வெளியாகவுள்ளதாக குறிப்பிட்ிடுள்ளன. அதில் திருமணம் மற்றும் அது சார்ந்து நடைபெற்ற நிகழ்வுகள் இடம் பெறுகின்றன.

எனினும் அதற்கு கிடைக்கும் வரவேற்பைப் பொறுத்து அடுத்த சீசன்கள் வெளியாக வாய்ப்புள்ளது. அதில் நயன்தாராவின் வாழ்க்கை பயணம் இடம்பெறும் எனவும் சொல்லப்படுகிறது. அதற்கான படப்பிடிப்பை இயக்குநர் கெளதம் மேனன் நேரம் கிடைக்கும் போதெல்லாம் படப்பிடிப்பு நடத்தி வருகிறார். அத்துடன் ஒப்பந்தம் ரத்து என வெளியாகும் தகவல்கள் அனைத்தும் வதந்தி எனவும் விளக்கம் அளித்துள்ளனர். இந்த தகவல் விக்கி, நயன் ரசிகர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement