• May 20 2024

ஜவான் படத்தில் நயன்தாராவுக்கு போட்டியாக களமிறங்கும் பிரபல நடிகை- யார் தெரியுமா

Aishu / 1 year ago

Advertisement

Listen News!

தென்னிந்திய சினிமாவில் முன்னணி நட்சத்திரங்களில் ஒருவராக வலம் வருபவர் நடிகை நயன்தாரா. லேடி சூப்பர் ஸ்டார் எனப் போற்றப்படும் இவர் ரஜினிகாந்த், அஜித், விஜய், தனுஷ், சிவகார்த்திகேயன், விஜய் சேதுபதி, ஜெயம் ரவி என முன்னணி நடிகர்கள் பலருடனும் இணைந்து ஜோடியாக நடித்துள்ளார்.

இவருக்கு தமிழ் சினிமாவில் மட்டுமல்லாது பாலிவுட்டிலும் ஏராளமான ரசிகர்கள் உண்டு. இந்நிலையில் பாலிவுட்டிலும் தடம் பதித்துள்ள நடிகை நயன்தாரா தற்போது "ஜவான்" படத்தில் ஷாருக்கானுக்கு ஜோடியாக நடித்து வருகின்றார்.

இப்படத்தினை தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குநர்களில் ஒருவராக இருக்கின்ற அட்லீ இயக்கி வருகின்றார்.

இந்நிலையில் இப்படத்தில் நயன்தாராவுடன் இணைந்து மற்றுமோர் நடிகையும் நடிக்க உள்ளதாக தற்போது செய்திகள் வெளியாகி இருக்கின்றன. அதாவது பிரபல பாலிவுட் நடிகையான தீபிகா படுகோன் நடிக்கவுள்ளதாக சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இந்நிலையில் நயன்தாராவுக்கு போட்டியாக கவுரவத் தோற்றத்தில் நடிகை தீபிகா படுகோன் களமிறங்கி இருப்பதால் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்புக் கிளம்பியுள்ளது.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement