• Sep 09 2024

தனியாக வாழப்பழகுங்க மேடம்- கவினுக்கு திருமணம்நடந்து முடிந்ததால் losliya வெளியிட்ட போட்டோ

stella / 1 year ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலம் மிகவும் பிரபலமானவர் நடிகை லாஸ்லியா.பிக்பாஸைத் தொடரந்து தமிழ் சினிமாவில் கதாநாயகியாகவும் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. ஃபிரெண்ட்ஸ் டே என்ற படத்தில் கதாநாயகியாக நடித்து தமிழில் சினிமாவில் அறிமுகமானார். 


ஆனால் இப்படம் சொல்லும் அளவிற்கு ரசிகர்கள் மத்தியில் ரீச் ஆகவில்லை. லாஸ்லியாவின் ஆர்மி பட்டித்தொட்டி எங்கும் பிரபலமாக வலம் வருகின்றது. அத்தோடு இவர் படவாய்ப்பைப் பெறுவதற்காக தொடர்ந்து போட்டோ ஷீட் நடத்துவதையும் வழக்கமாக வைத்துள்ளார்.


பிக் பாஸ் வீட்டுக்குள் லாஸ்லியா மற்றும் கவின் இவர்களிடையே ஏற்பட்ட காதல் சூடு பிடிக்க மேலும் நிகழ்ச்சியை சுவாரஸ்யமானதாக கொண்டு சென்றது.பிக்பாஸில் இருக்கும் போது நடிகர் கவினைக் காதலித்து இருந்தார். இருப்பினும் நிகழ்ச்சியை விட்டு வெளியேறிய பின் இருவரும் பிரிந்து விட்டனர்.


 இந்த நிலையில் கவினுக்கு இன்றைய தினம் அவரது தோழியுடன் திருமணம் நடந்தது. திருமணத்திற்கு பிரபலங்கள் பலரும் கலந்து கொண்டு சிறப்பித்திருந்தனர். அத்தோடு ரசிகர்களும் தமது வாழ்த்துக்களைத் தெரிவித்து வருகின்றனர்.


இந்த நிலையில் கவின் திருமணம் முடித்திருக்கும் நிலையில் லாஸ்லியா "Can't help but wonder என்று குறிப்பிட்டவாறு தனது புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். அவை வைரலாகி வருவதையும் காணலாம்.



Advertisement

Advertisement