• Sep 21 2023

அர்ராசக்க.... bigg-boss-7 நிகழ்ச்சி ஆரம்ப தேதி அறிவிச்சாச்சு- வெளியாகிய சூப்பர் தகவல்

stella / 1 month ago

Advertisement

Listen News!


விஜய் டிவி பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு  என்றே மிகப்பெரிய ரசிகர் கூட்டம் இருக்கிறது என்பதுஅனைவருக்கும் தெரிந்ததே. உலக நாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் இந்த நிகழ்ச்சிக்கென்று தனி ரசிகர் பட்டாளம் காணப்படுகின்றது.இந்த நிகழ்ச்சியின் சீசன் 7 அக்டோபர் மாதம் தொடங்கவிருப்பதாக கூறப்படுகின்றது.

 முந்தைய சீசன்களில் இல்லாத வகையில் தற்போது இரண்டு வீடுகள் செட் போடப்பட்டு இருப்பதாகவும், போட்டியாளர்கள் இரண்டு டீம்களாக பிரிக்கப்பட்டு அந்த வீடுகளில் தங்க வைக்கப்பட இருக்கின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது. 

சாதாரணமாகவே பிக் பாஸ் வீட்டுக்குள் பிரச்சனை என்றால் வீடு இரண்டாகும்., தற்போது வீடே இரண்டு என்றால் இன்னும் கலாட்டா, கலவரங்களுக்கு பஞ்சமிருக்காது என்று எதிர்பார்க்கப்படுகிறது.  


இந்த நிகழ்ச்சிக்கான முதல் ப்ரோமோ வெளியாகியிருந்தது. அதில் கமல் நடுக்கடலில் நின்று வழக்கமாக அவர் சொல்லும் 'I am watching' என சைகையில் கூறி இருந்தார்.அந்த ப்ரோமோ இணையத்தில் வைரல் ஆகி இருந்த நிலையில் போட்டியாளர்களாக யார் எல்லாம் வருவார்கள் என ரசிகர்கள் எதிர்ப்பார்த்து காத்திருக்கிறார்கள்.

உத்தேச போட்டியாளர்கள் லிஸ்ட் என ஒன்று தொடர்ந்து சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.அக்டோபர் 8ம் தேதி பிக் பாஸ் பிரம்மாண்ட தொடக்க விழாவுடன் ஆரம்பிக்க இருக்கிறதாம் என்பதும் குறிப்பிடத்தக்கது.  



Advertisement

Advertisement

Advertisement