• May 20 2024

சன்னி லியோனுடன் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ள ஜிபி முத்து.. புகழ்ந்து தள்ளிய இயக்குநர்!

Aishu / 1 year ago

Advertisement

Listen News!

டைரக்டர் யுவன் இயக்கத்தில் சன்னி லியோன் லீட் கதாபாத்திரத்தில் நடித்துள்ள படம் ஓ மை கோஸ்ட்.இந்தப் படத்தில் பிக்பாஸ் போட்டியாளர் ஜிபி முத்து முக்கியமான கேரக்டரில் நடித்துள்ளார் என தகவல் வெளியாகி உள்ளது.


இந்தப் படத்தில் சன்னி லியோன் ராணியாக நடித்துள்ளார்.மிகுந்த பொருட்செலவில் வரலாற்று பின்னணியுடன் உருவாக்கப்பட்டுள்ள இந்தப் படம் காமெடிக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு எடுக்கப்பட்டுள்ளது. இப் படத்தில் சதீஷ், யோகிபாபு ஆகியோர் முக்கியமான கேரக்டர்களில் நடித்துள்ள நிலையில், ரமேஷ் திலக், ரவி மரியா மற்றும் முக்கியமான கேரக்டரில் தர்ஷா குப்தா ஆகிய பலரும் நடித்துள்ளனர்.

மேலும் இவர்களுடன் தற்போது பிக்பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியில் பங்கேற்று அனைவரையும் கவர்ந்துவரும் பிரபல யூடியூபர் ஜிபி முத்துவும் முக்கியமான கேரக்டரில் நடித்துள்ளார் என கூறப்படுகின்றது. விரைவில் வெளியாகவுள்ள இந்தப் படத்தின் டீசர் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது.


இந்தப் படத்தில் தனக்கு முதலில் அதிகமாக பரிட்சயமில்லாத ஜிபி முத்துவை தன்னுடைய டீம்தான் தனக்கு அறிமுகப்படுத்தியதாகவும் இவர் எப்படி நடிப்பார் என்று ஆரம்பத்தில் தனக்கு தயக்கம் இருந்ததாகவும் படத்தின் இயக்குநர் யுவன் கூறியுள்ளார்.. ஆனால் தான் எதிர்பார்த்ததை காட்டிலும் உடனடியாக கேரக்டரை ஜிபி முத்து உள்வாங்கி நடித்ததாகவும் அவர் வெகுவாக  பாராட்டியுள்ளார்.


அவருக்குள் ஒளிந்திருக்கும் நடிகர் இந்தப் படத்தில் கண்டிப்பாக வெளிப்படுமென்றும் யுவன் தெரிவித்துள்ளார். அவர் பெரிய காமெடியனாக வரும் வாய்ப்பு பிரகாசமாக உள்ளதாகவும தெரிவித்துள்ளார். படத்தில் நாட்டு வைத்தியராக நடித்துள்ள ஜிபி முத்துவை காட்டிலும் அந்தக் கேரக்டருக்கு வேறு யாரும் சிறப்பாக பொருந்திவிட முடியாது என்றும் தெரிவித்துள்ளார்.


மேலும் இந்தப் படத்தில் அவரது நடிப்பை ரசிகர்கள் கொண்டாடுவார்கள் என்றும் யுவன் நம்பிக்கை தெரிவித்துள்ளார். எனினும் இதேபோல இந்தப் படத்தில் நடித்து தமிழில் அறிமுகமாகியுள்ள சன்னி லியோனை வைத்து தான் இந்தக் கதையையே உருவாக்கியதாகவும் கதையை கேட்டவுடன் இம்ப்ரஸ் ஆகி அவர் உடனடியாக ஓகே சொல்லியதாகவும் தெரிவித்துள்ளார்..


வரலாற்றுக் கதையாக இருந்தாலும் இந்தப் படத்தில் ரோம், இத்தாலி ஸ்டைலில் கதைக்களம் இருப்பதால் வித்தியாசமான லுக்கிற்கு சன்னி லியோன் பொருத்தமாக இருப்பார் என்று தன்னுடைய படக்குழு முதலிலேயே தீர்மானித்து, கஷ்டப்பட்டு இந்தக் கதையில் சன்னி லியோனை கொண்டு வந்ததாகவும் அவர் குறிப்பிட்டு இருந்தார்.

Advertisement

Advertisement