• Jan 18 2025

மெயின் வில்லனாக களமிறங்கும் கணேஷ்; கோபியை வார்த்தையால் அடிக்கும் ஜெனி! பரபரப்பாக நகரும் பாக்கியலட்சுமி

Aathira / 1 year ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் விறுவிறுப்புக்கு பஞ்சம் இல்லாமல் ஓடிக் கொண்டிருக்கும் சீரியல் தான் பாக்கியலட்சுமி. இந்த சீரியலில் அடுத்து எவ்வாறு நகரும் என்பதை பார்ப்போம்.

இதுவரையில், பாக்கியா வீட்டிற்கு வந்த மாலினி தானும் செழியனும் ஒன்றா வாழ்ந்தாக அனைவரிடமும் அவரும் செழியனும் எடுத்துக் கொண்ட போட்டோவை காட்ட வீட்டில் உள்ள அனைவரும் அதிர்ச்சியடைகின்றனர். இதை தொடந்து செழியன் பற்றிய உண்மைகளை அறிந்த ஜெனி வீட்டை விட்டு வெளியே செல்கிறார்.


இனி என்ன நடக்கும் என்று பார்த்தால், ஒருபக்கம் ஜெனி வீட்டிற்கு செல்லும் பாக்கியா ரூமில் இருக்கும் ஜெனியை கதவை திறக்குமாறு தட்டி அழைக்கிறார். எனினும் கதைவை திறக்க மறுத்த ஜெனி உள்ளே 'செழியன் இப்படி செய்துட்டானே என்ற கவலையில் கையை அறுத்துக் கொள்வது போல தோன்றும்' எனினும் அவ்வாறு இல்லாமல் 'நான் நல்லா தான் இருக்கன் ஆன்டி. உங்கள பாத்தே நான் எல்லாம் பழகிட்டன். கோபி அங்கிள்ட மகன் அவர போல தானே இருப்பான்' என சொல்கிறார் ஜெனி. எனினும் அடுத்து ஜெனி எடுக்க போகும் முடிவுகள் என்ன என்று பொறுத்திருந்து பார்ப்போம்.


அதேபோல, மெயின் வில்லனாக களமிறங்க போகிறார் கணேஷ். தனது மனைவி பிள்ளையை மீட்கும் நோக்கத்தில் பொறுமையை இழந்து பாக்கியாவின் வீட்டை இரண்டாக ஆக்கப்போகிறார். எனவே, பாக்கியா தொடர் இனி அடுத்தடுத்து எதிர்பாராத திருப்பங்களை கொண்டு நகரும் என்பதில் ஐயமில்லை. பொறுத்திருந்து பார்ப்போம்.


 

Advertisement

Advertisement