• Dec 08 2023

விஜய்யின் மனைவி சங்கீதா லியோ படத்தின் சக்ஸஸ் மீட்டுக்கு வராமல் விட்டதற்கு இது தான் காரணமா?- உண்மையை உடைத்த பிரபலம்

stella / 1 month ago

Advertisement

Listen News!

விஜய் நடிப்பில் கடந்த மாதம் 19ம் தேதி சர்வதேச அளவில் ரிலீசான லியோ படம் 500 கோடி ரூபாய்களை தாண்டி சர்வதேச பாக்ஸ் ஆபீசில் வசூலித்துள்ளது. இந்தப் படம் தமிழ், தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் பான் இந்தியா படமாக வெளியாகி அனைத்து மொழிகளிலும் ரசிகர்களிடையே மிகச்சிறந்த வரவேற்பை பெற்றுள்ளது. 

படம் கலவையான விமர்சனங்களை பெற்ற போதிலும் ரசிகர்களின் கொண்டாட்டத்திற்கு உள்ளாகியுள்ளது. இந்தப் படத்தின் சக்சஸ் மீட் கடந்த 1ம் தேதி சென்னையில் நடைபெற்ற நிலையில், விஜய், த்ரிஷா, மிஷ்கின், கௌதம் மேனன், அர்ஜூன் உள்ளிட்ட படக்குழுவினர் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்று சிறப்பித்தனர். 


நிகழ்ச்சியில் பல சுவாரஸ்யங்களை ரசிகர்கள் பார்க்க முடிந்தது. வழக்கமாக இசை வெளியீட்டின்போது குட்டிக் கதை சொல்லி ரசிகர்களை கவரும் விஜய், இந்தப் படத்திற்கான இசை வெளியீடு நடக்காத நிலையில், சக்சஸ் மீட்டில் தன்னுடைய குட்டி ஸ்டோரியை சொல்லி அசத்தினார்.

இந்நிலையில் விஜய்யின் மனைவி சங்கீதா எதற்காக லியோ சக்சஸ் மீட்டில் கலந்துகொள்ளவில்லை என பயில்வான் ரங்கநாதன் பேசியிருக்கிறார்.

அவர் அளித்த பேட்டியில், “லியோ படத்தின் விழாவில் விஜய்யின் மனைவி சங்கீதா பங்கேற்கவில்லை. அதற்கு த்ரிஷாதான் காரணம். அதாவது த்ரிஷா வந்ததால் சங்கீதா வரவில்லை. அந்தப் படத்தில் த்ரிஷாவுக்கு விஜய் லிப் லாக் கொடுத்தது அவரது வீட்டில் பெரிய பிரச்னையாக வெடித்திருக்க அனைத்து வாய்ப்புகளும் இருக்கின்றன.


லியோ படத்துடைய சக்சஸ் மீட் என்பது மிகப்பெரிய பொய். அங்கு நடந்தது விஜய் மக்கள் இயக்கம் ரசிகர்களின் சந்திப்பு கூட்டம்தான். வழக்கமாக புஸ்ஸி ஆனந்த் மட்டும் மக்கள் இயக்கத்தில் பேசிக்கொண்டு இருக்கிறாரே என்பதற்காக ரசிகர்களிடம் விஜய் பேசுவதற்கு தயாரிப்பாளர் லலித் குமார் செலவில் ஏற்பாடு செய்யப்பட்ட விழாதான் இது. 

 லியோ படத்தின் வெற்றி விழா என்றால் படத்தில் நடித்த நடிகர்கள், நடிகையர்கள், தொழில்நுட்ப கலைஞர்கள், விநியோகஸ்தர்கள், தியேட்டர்கள் ஓனர்களுக்கு ஷீல்டு கொடுத்திருக்க வேண்டும். ஆனால் அப்படி எதுவும் செய்யவில்லை. இதில் ரஜினிகாந்த், கமல் ஹாசன் கலந்துகொள்ளும் வாய்ப்புகள் இருந்தன. 

 இது விஜய் மக்கள் இயக்க கூட்டமாக நடந்ததால் அவர்கள் பங்கேற்கவில்லை. விஜய்யை பொறுத்தவரை ரசிகர்களை சந்தித்து பேசுவதற்கான வாய்ப்பாக இதனை பார்த்தார். அவர் நினைத்ததை நிறைவேற்றிக்கொண்டார். இது லியோ படத்தின் வெற்றி விழாவே இல்லை. விஜய் ரசிகர் மன்ற மாநாடுதான்" என்றார்.


Advertisement

Advertisement

Advertisement