• Jan 18 2025

'நீங்க மொத்தமா சேந்து அடிச்சு காலி பண்ணது ஒரு வீரன தான்' குறும்படம் வந்தா தெரியும்! வெளுத்து விளாசிய ரவீந்திரன்

Aathira / 1 year ago

Advertisement

Listen News!

பிக்பாஸ் சீசன் 7 நிகழ்ச்சியானது விஜய் டிவியில் விறுவிறுப்புக்கு பஞ்சம் இல்லாமல் ஓடிக் கொண்டிருக்கின்றது. ஆனாலும் இறுதிவரை செல்வார் என எதிர்பார்க்கப்பட்ட பிரதீப் ரெட் கார்ட் கொடுத்து வெளியே அனுப்பப்பட்டார்.

இந்த நிலையில், அவருக்கு சார்பாக பல பிரபலங்கள் முன்வந்து தமது விவாதங்களை முன்வைக்கின்றனர்.அதன்படி ரவீந்திரனும் தனது கருத்தை பேட்டி ஒன்றில் பகிர்ந்துள்ளார்.

அதன்படி கூறிய அவர், 'நீங்க எல்லாருமா சேர்ந்து அடிச்சு காலி பண்ணது ஒரு வீரன தான். நீங்க அவனுக்கு பிளான் பண்ணி வெளிய அனுப்பி இருக்கீங்க. அவன் அப்படியெல்லம் கதைச்சதுக்கு  ஒரு குறும்படம் இல்லாமலா போகும். அத போட்டு காமிக்கிற தானே.ஆனா அத செய்யல. ரெட் கார்ட்ட குடுத்து நேரா வெளிய அனுப்பியாச்சு. பிக் பாஸ் வீட்டுல அன்னைக்கு நிக்சன் அந்த பொண்ணோட கிஸ் அடிச்சத போட்டு காட்ட முடியும், பிரதீப் பெண்கள் விசயத்துல தப்பா நடந்த அந்த காட்சியையும் போட்டு காட்டுற தானே. அதோட வினுசா விசயத்துல அக்கா அக்கானு கூப்பிட்டு அவன் கீழ்தரமான கமெண்ட் அடிச்சி இருந்தான்.அது எல்லாம் உங்க கண்ணுக்கு தெரியலையா?


ஆனாலும், பிக் பாஸ்ல இருந்து வெளிய வந்த பிரதீப் நிறைய நல்ல உள்ளங்கள உள்ள இருந்து சம்பாதிச்சுட்டான் .நீங்க எல்லாரும் சேர்ந்து அடிச்சு காலி பண்ணது ஒரு வீரனதான். கடைசில பொண்ணுங்கள வச்சு இப்படி செஞ்சிட்டீங்க இல்ல. அந்த பெண்கள் சொல்றது உண்மை என்றா  அவர்களிடம் நிச்சயம் உண்மை இருக்கும் என்றா நிச்சயம் குறும்படம் போட்டு காட்டுங்க' என பிரதீப் பக்கம் உள்ள நியாயத்தை எடுத்து விளாசியுள்ளார் ரவீந்திரன்.

Advertisement

Advertisement