• Jan 18 2025

போலீஸுடன் பாக்கியா வீட்டுக்கு வந்த கணேஷ்,ஈஸ்வரிக்கு ஜெனி அப்பா சொன்ன அதிர்ச்சித் தகவல்- Baakiyalakshmi Serial

stella / 1 year ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் சூப்பர் ஹிட்டாக ஓடிக் கொண்டிருக்கும் சீரியல் தான் பாக்கியலட்சுமி. இந்த சீரியலில் அடுத்து என்ன நடக்கப்போகின்றது என்பதற்கான ப்ரோமோ வெளியாகியுள்ளது.

அதில்,கோபி ஈஸ்வரி கோட்டில் நடந்த விதம் பற்றி பேசிக் கொண்டு வருகின்றார். அப்போது இடையே ஜெனியின் அப்பா வர ஈஸ்வரி வீட்டில யாருமே ஜெனியை கொடுமைப்படுத்தல,தேவையில்லாமல் பொய் சொல்லுற என்று சொல்ல ஜெனியின்அப்பா செழியன் இன்னும் அந்த பொண்ணோட தொடர்பில் இருக்கிறான் என்று சொல்கின்றார்.


இதைக் கேட்ட கோபி அதிர்ச்சியடைந்ததோடு,அப்படியெல்லாம் எதுவும் இல்லை என்று சொல்கின்றார். மேலும் ஈஸ்வரி குழந்தை எங்களுககு தான் சொந்தம் அந்த குழந்தையை எப்படி வாங்கணும் என்று எனக்கு தெரியும் என்று சொல்லி விட்டு வருகின்றார்.

தொடர்ந்து கணேஷ் போலீஸ் ஸ்டேசனுக்குச் சென்று அமிர்தாவை கடத்தி விட்டார்கள் என்று சொல்லி ஒரு போலீஸை வீட்டுக்கு கூட்டிக் கொண்டு வருகின்றார்.பாக்கியா வீட்டுக்கு வந்த போலீஸ், பாக்கியா வீட்டை சுற்றி சுற்றிப் பார்ப்பதோடு பாக்கியா கையால் டீ வாங்கிக் குடிக்கின்றார்.


பின்னர்,எழிலைக் கூப்பிட்டு என்ன நடந்தது என்று விசாரிக்கின்றார். அப்போது எழில் அமிர்தாவை எப்படிக் கல்யாணம் பண்ணினேன் என்ற விஷயத்தைச் சொல்ல அந்தப் போலீஸ் அமிர்தாவைக் கூப்பிட்டு நீ யாருடன் வாழப்போற பதிலை சொல்லுமா என்று கேட்கின்றார்.இத்துடன் இன்றைய எப்பிஷோட் முடிவடைகின்றது.


Advertisement

Advertisement