தமிழ் சினிமாவில் வெற்றிப் படங்களின் இயக்குநராக மட்டுமல்லாமல், தனக்கென ஒரு சினிமா உலகத்தையே (LCU) உருவாக்கிய லோகேஷ் கனகராஜ், தற்போது முழுநீள நடிகராக ரசிகர்களை சந்திக்க தயாராகியுள்ளார். அவரது முதல் கதாநாயகன் பயணமாக உருவாகியுள்ள ‘டிசி’ திரைப்படத்தின் வெளியீட்டு தேதியை படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
மாநகரம் திரைப்படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமான லோகேஷ் கனகராஜ், அதன்பின்னர் கைதி, மாஸ்டர், விக்ரம், லியோ போன்ற தொடர்ச்சியான வெற்றிப் படங்களை வழங்கி தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குநர்களில் ஒருவராக உயர்ந்தார்.
குறிப்பாக, லோகேஷ் சினிமாட்டிக் யூனிவர்ஸ் (LCU) என்ற புதிய முயற்சி இந்திய சினிமாவிலேயே பெரும் கவனத்தை ஈர்த்தது. சமீபத்தில் ரஜினிகாந்தை வைத்து இயக்கிய கூலி திரைப்படமும் ரசிகர்களிடம் வரவேற்பைப் பெற்றது.
இந்நிலையில், இயக்குநராக மட்டுமல்லாமல் நடிகராகவும் தனது திறமையை நிரூபிக்கும் முயற்சியில் லோகேஷ் கனகராஜ் களமிறங்கியுள்ளார். இயக்குநர் அருண் மாதேஸ்வரன் இயக்கியுள்ள ‘டிசி’ திரைப்படத்தில் அவர் ‘தேவதாஸ்’ என்ற கேங்ஸ்டர் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இது அவரது முழுநீள கதாபாத்திரம் என்பதால் ரசிகர்களிடையே அதிக எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது.

சன் பிக்சர்ஸ் தயாரித்துள்ள இந்தப் படத்தில் லோகேஷ் கனகராஜுக்கு ஜோடியாக நடிகை வாமிகா கபி ‘சந்திரா’ என்ற கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். மேலும், சஞ்சனா உள்ளிட்ட பலரும் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளதால் இசை மீதும் ரசிகர்கள் அதிக எதிர்பார்ப்பில் உள்ளனர்.
சமீபத்தில் வெளியான ‘டிசி’ படத்தின் கிளிம்ப்ஸ் மற்றும் டிரெய்லர் சமூக வலைதளங்களில் பெரும் வரவேற்பைப் பெற்றது. டிரெய்லரில் லோகேஷ் கனகராஜ் அதிரடியான கேங்ஸ்டர் தோற்றத்தில் காட்சியளிப்பதுடன், வாமிகா கபி மற்றும் சஞ்சனா பாலியல் தொழிலாளிகளாக நடித்திருப்பதும் கவனத்தை ஈர்த்தது.
பழிவாங்கும் கதைக்களத்தில் உருவாகியுள்ள இப்படத்தில் வன்முறை மற்றும் ரத்தம் தெறிக்கும் காட்சிகள் அதிகம் இடம்பெற்றுள்ளதால், படத்திற்கு 'ஏ' சான்றிதழ் வழங்கப்படலாம் என்ற தகவலும் வெளியாகியுள்ளது.
இதற்கிடையில், ரசிகர்கள் நீண்ட நாட்களாக காத்திருந்த முக்கிய அறிவிப்பை படக்குழு வெளியிட்டுள்ளது. அதன்படி, ‘டிசி’ திரைப்படம் வரும் ஜூலை 31-ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகும் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
Devadas and Chandra are ready to light up the big screen! #DC Releasing worldwide from July 31❤️🔥#DCFromJuly31@Dir_Lokesh @ArunMatheswaran @anirudhofficial @WamiqaG @isanjkayy @mukesh_DOP #PrasannaGK #KannanS @PC_stunts @kabilanchelliah#DCTheBloodyValentineFromJuly31 pic.twitter.com/DaJLz6lx9D
Listen News!