• Sep 08 2026

வீடியோ அனுப்பி வெறுப்பேற்றிய விஜயா... ரேகாவுக்கு மீனா கொடுத்த சர்ப்ரைஸ்..?

Aathira / 2 months ago

Advertisement

Listen News!

சிறகடிக்க ஆசை சீரியலின் இன்றைய எபிசோடில், சத்யாவுக்கும் ரேகாவுக்கும் திருமணக் கொண்டாட்டம் கோலாகலமாக நடைபெறுகிறது. இதன்போது, தன்னால் முடிந்த பரிசாக ரேகாவின் கழுத்தில் தங்கச் செயின் ஒன்றை அணிவிக்கிறார் மீனா.

அதே நேரத்தில், இந்தக் கல்யாணத்தை வைத்து சிந்தாமணியை எப்படியாவது பழிவாங்க வேண்டும் என்று விஜயா திட்டம் போடுகிறார். அதன்படி, அங்கு நடைபெறுபவற்றை வீடியோ எடுத்து சிந்தாமணிக்கு அனுப்பியதோடு, அவருக்கு சவாலும் விடுக்கிறார்.


இதைத் தொடர்ந்து, சிந்தாமணி தனது கணவருடன் பாட்டி வீட்டை நோக்கி புறப்படுகிறார். விஜயா வில்லங்கமாக எதுவும் செய்ய வேண்டாம் என்று பார்வதி அவருக்கு அட்வைஸ் செய்கிறார். ஆனாலும், "நான் சிந்தாமணிக்கு பதிலடி கொடுத்தே தீருவேன்" என்று விஜயா உறுதியாக இருக்கிறார்.

இதைத் தொடர்ந்து, சிந்தாமணி வரும் வழியிலேயே ரேகாவுக்கு தொடர்ந்து போன் செய்கிறார். ஆனால், அவர் போனை எடுக்கவில்லை. இதன்போது அங்கு வந்த விஜயா, "இப்போதைக்கு சிந்தாமணியின் போனை எடுக்க வேண்டாம்" என்று எச்சரிக்கிறார். இதுவே இன்றைய எபிசோட்.

Advertisement

Advertisement