சுந்தர். சி இயக்கத்தில் விஷால் நடித்த மதகஜராஜா திரைப்படம் கிட்டத்தட்ட 12 ஆண்டுகளுக்குப் பிறகு பொங்கல் தினத்தை முன்னிட்டு ரிலீஸ் ஆக உள்ளது. இந்த படத்தில் விஷாலுக்கு ஜோடியாக அஞ்சலி மற்றும் வரலட்சுமி ஆகியோர் நடித்துள்ளார்கள். மேலும் இந்த படத்தில் காமெடியனாக கலக்கியுள்ளார் சந்தானம்.
2013 ஆம் ஆண்டு ரிலீஸுக்கு தயாரான நிலையில் காணப்பட்ட மதகஜராஜா திரைப்படம் தயாரிப்பாளர்களின் நிதி பிரச்சனை காரணமாக தள்ளிப் போய்க் கொண்டே இருந்தது. ஐந்து ஆண்டுகள் ஒரு படம் ரிலீஸ் ஆகாமல் கிடப்பில் கிடந்தாலே அந்தப் படத்திற்கு சோலி முடிந்து என்று தான் சொல்லுவார்கள். ஆனால் மதகஜராஜா திரைப்படம் 12 ஆண்டுகளுக்குப் பின் வெளியாக உள்ளது.
d_i_a
தற்போது மதகஜராஜா திரைப்படத்திற்கான பட ப்ரமோஷன் பணிகள் நடைபெற்று வரும் நிலையில், நேற்றைய தினம் சென்னையில் இந்த படத்திற்கான பிரஸ்மீட் நடைபெற்றது. இதில் சுந்தர் சி, விஷால், விஜய் ஆண்டனி மற்றும் குஷ்பூ ஆகியோர் கலந்து கொண்டிருந்தார்கள்.
இந்த நிலையில், மதகஜராஜா பட ப்ரோமோஷனில் விஷால் கொடுத்த பேட்டி வைரலாகி வருகின்றது. அதன்படி அவர் கூறுகையில், மதகஜராஜா திரைப்படத்தின் போது ஒரு இன்சிடென்ட் நடந்துச்சு.. அதுல என் மொத்த சினிமா கேரியருமே முடிந்தது என்று தான் நினைத்தேன்.
அதாவது இந்த படத்தின் ஒரு சீனில் நடந்த விபத்தில் எனக்கு பின் தலையில் பலமாக அடிபட்டது. அங்கிருந்த எல்லோருமே அதிர்ச்சியில் ஆடிப் போய் அமர்ந்தே விட்டார்கள். என்னை உடனடியாக அருகில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையிலும் சேர்த்தனர். அந்த நிமிடம் நான் எனது மொத்த சினிமா கேரியருமே முடிந்ததாகவே நினைத்தேன்.
ஆனால் என்னை செக் பண்ணிய டாக்டர் நீங்க கொஞ்சம் ஸ்ட்ரோங்காக இருப்பதால் பாதிப்புகள் இல்லாமல் தப்பி விட்டீர்கள் என்று சொன்னார். அதனை நான் இப்பவும் மறக்க மாட்டேன் என்று ரொம்பவும் எமோஷனலாக பேசி உள்ளார் விஷால்.
இதேவேளை நேற்றைய தினம் இடம் பெற்ற பிரஸ்மீட்டில் கடும் காய்ச்சலுடன் விஷால் பங்கேற்ற நிலையில் அவருடைய கைகள் நடுங்கி உடல் சோர்வாக இருந்தது. இது இணையதளத்தில் வைரலாகி வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.
Listen News!